ஏ.ஐ-யை விட இந்த 2 கோர்ஸ் டாப்: 2025-ல் மாணவர்கள் மிக அதிக விகிதத்தில் தேர்வு செய்த பொறியியல் படிப்புகள் இவைதான்!
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர்.
இன்ஜினியரிங் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் சமீப காலமாக அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இருப்பினும் எதிர்கால டிஜிட்டல் யுகத்தை கருத்தில் கொள்ளும்போது எலக்ட்ரானிக்ஸ் துறையும் சமமாக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடையே அதிக டிமாண்ட் இருந்த கோர்ஸ்களின் பட்டியலை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி,
5-ம் இடம்: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் – ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேர்னிங் – சேர்க்கை சதவீதம் – 74.97%
4-ம் இடம்: எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் – சேர்க்கை சதவீதம் – 75.14%
3-ம் இடம்: ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் – சேர்க்கை சதவீதம் – 78.28%
2-ம் இடம்: இன்பர்மேஷன் டெக்னாலஜி - சேர்க்கை சதவீதம் – 78.29%
முதல் இடம்: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் – சேர்க்கை சதவீதம் – 78.54%

No comments