Breaking News

அரசு ஊழியர்களின் நீண்ட காலக் கனவு நனவாகுமா? ஜனவரியில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம்!

 


Old Pension Scheme Update: 2021 சட்டமன்றத் தேர்தலின் போது "ஆட்சிக்கு வந்தால் OPS அமல்படுத்தப்படும்" என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி முடிய உள்ள நிலையில் ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிதி நிலைமை மற்றும் ஊழியர் நலன் குறித்து அமைச்சர்களின் அவசர ஆலோசனை. பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன. தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட காலக் கனவான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமலாகப் போகிறதா? 2026 தேர்தலுக்கு முன் அதிரடி திருப்பம் நிகழுமா? பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) குறித்து தற்போதைய தமிழக அரசின் நிலைபாடு என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

திமுக தேர்தல் அறிக்கை

தமிழக அரசு ஊழியர்களும் மற்றும் ஆசிரியர்களும் ஓபிஎஸ் எனப்படும் பழைய பென்ஷன் திட்டத்தை (Old Pension Scheme - OPS) மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்" என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னமும் பழைய பென்ஷன் திட்டம் குறித்து முடிவு ஏதும் அதிகாரப்பூர்வமாக இன்னும் எடுக்கப்படவில்லை.

புதிய பென்ஷன் திட்டம்

அதே சமயம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடும் பொழுது தற்போது "புதிய பென்ஷன் திட்டம்" தான் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்ததால், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யல்லது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து இடைவிடாமல் போராடி வருகின்றனர்.

ககன்தீப் சிங் பேடி குழு அறிக்கை

இந்த நிலையில் முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பழைய ஓய்வுதிய திட்டம் (Old Pension Scheme - OPS), பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (National Pension System - NPS), ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டம் (Unified Pension Scheme - UPS) ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. 

அந்த குழுவினர் அரசு ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் எல்ஐசி போன்ற நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துறைகள் குறித்து தற்பொழுது தீர்மானங்கள் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள் ஆலோசனை

தற்பொழுது ககன்தீப் சிங் பேடி குழுவினருடன் தமிழ்நாடு அமைச்சர்களான தங்கம் தென்னரசு, ஏவா வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விரிவாக விவாதித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். தமிழக அரசின் நிதிநிலைமை மற்றும் அரசு ஊழியர்களின் நலன் ஆகிய இரண்டையும் சமன்படுத்தும் வகையில், எந்த திட்டம் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதா தகவல் வெளியாகி இருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் இறுதி அறிக்கை

இதற்கிடையே அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து டிசம்பர் மாத இறுதிக்குள்ள ககன்தீப் சிங் பேடி குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்த இறுதி அறிக்கை தொடர்பாகத் தான் தற்பொழுது பரபரப்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ககன்தீப் சிங் தலைமையிலான குழுவினர் மூன்று வகையான பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ததில், இறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு சிபாரிசு செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.

நிதி பற்றாக்குறை 

தமிழக அரசை பொறுத்தவரையில் நிதி பற்றாக்குறை காரணத்தால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கி வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் மிகவும் நெருங்கி விட்டதால்  ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல் செய்யாவிட்டால், அது திமுகவிற்கு பெரிய பின்னடைவாகும் என அமைச்சர்கள் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி 

அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுவதால்,  நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி வரி சமன்பாட்டில் இருந்து பணத்தை பங்களிக்கலாம் என்ற ஒரு ஆலோசனை செய்யப்பட்டதாம். அதன் அடிப்படையில் டிசம்பர் இறுதியில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான இறுதி அறிக்கை பரிசீலனை செய்து, ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்

தற்பொழுது சட்டமன்ற தேர்தல் வருவதால அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் திட்டம் என்பது திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுக தரப்புக்கு மிகவும் சாதகமாகும் என்பதல, பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன.

50 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்ப வாக்கு 

அதே சமயம் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதன் மூலம் திமுக அரசிற்கு தமிழ்நாடு அரசை சேர்ந்த சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்ப வாக்கு கிடைக்கலாம். அதனால் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பழைய பென்ஷன் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். 

முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தால், அது அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். டிசம்பர் இறுதி அறிக்கைக்குப் பின் முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த 'மெகா' முடிவு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.

 

 

No comments