Breaking News

SBI: வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ குறையப்போகுது.. வட்டி விகித்தை குறைத்த ஸ்டேட் பேங்க்..!

 


ரிசர்வ் வங்கி டிசம்பர் 5 அன்று ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது மூலம் தற்போது இந்தியாவின் பென்சமார்க் வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு பின்பு பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்தன. இதை தொடர்ந்து இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

வீட்டுக்கடன், வாகன கடன் என எந்த முக்கிய கடனாக இருந்தாலும் மக்கள் முதலில் அனுகுவதும் SBI வங்கியை தான், மக்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையை பெற்ற இவ்வங்கி ஆர்பிஐ அறிவித்த 0.25 சதவீத வட்டி குறைப்பை முழுமையாக கொடுத்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ தொகை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது பல்வேறு கடன் விகித அளவுகோல்களான MCLR, EBLR, RLLR, BPLR மற்றும் பேஸ் ரேட் ஆகியவற்றை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவின் இந்த வட்டி குறைப்பு டிசம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வீட்டுக் கடன், தனிப்பட்ட கடன், நிறுவன கடன் வாங்கியர்களின் EMI குறையும் அல்லது கடன் காலம் குறையும். எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய கடனுக்கான வட்டி விகிதம், கடன் காலம், ஈஎம்ஐ தொகை ஆகியவை டிசம்பர் 15ஆம் தேதி மாறுகிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இப்படி மாறாத நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே உள்ல இணைப்பை கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
SBI MCLR விகிதங்கள்: SBI தனது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் (MCLR)யை அனைத்து காலங்களுக்கும் 5 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் ஓவர்நைட் மற்றும் ஒரு மாத MCLR விகிதம் 7.90 சதவீதத்தில் இருந்து 7.85 சதவீதமாகவும், மூன்று மாதம் 8.30 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாகவும், ஆறு மாதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து ஒரு ஆண்டு MCLR (பெரும்பாலான ரீடெயில் கடன்களுக்கு பயன்படும்) 8.75 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாகவும், இரண்டு ஆண்டு 8.80 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாகவும், மூன்று ஆண்டு 8.85 சதவீதத்தில் இருந்து 8.80 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. இது MCLR உடன் இணைந்த கடன் வாங்கியர்களுக்கு அனைவருக்கும் நிவாரணம் அளிக்கும். ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ள வேளையில் எஸ்பிஐ வங்கி தனது MCLR விகிதத்தில் வெறும் 0.05 சதவீதம் மட்டுமே குறைத்துள்ளது. EBLR மற்றும் RLLR குறைப்பு: SBI தனது எக்ஸ்டர்னல் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட் (EBLR)யை 8.15 சதவீதம் + கிரெடிட் ரிஸ்க் பிரீமியம் (CRP) + பேங்க் ஸ்ப்ரெட் (BSP) என்று இருந்ததை 7.90 சதவீதம் + CRP + BSP ஆக குறைத்துள்ளது. ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் (RLLR) 7.75 சதவீதம் + CRP என்று இருந்ததை 7.50 சதவீதம் + CRP ஆக மாற்றியுள்ளது. எஸ்பிஐ வங்கி EBLR மற்றும் RLLR ஆகிய இரண்டும் ரெப்போ விகிதத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், RBI குறைப்பு முழுமையாக அதாவது 0.25 சதவீத குறைப்பு முழுமையாக கொடுத்துள்ளது. இந்த வட்டி குறைப்பும் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது. நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் EBLR மற்றும் RLLR கீழ் கடன் வாங்கியிருந்தால் கட்டாயம் ரெப்போ விகித குறைப்பின் முழு பயன் கிடைக்கும். கடன் வாங்கியர்களுக்கு என்ன பயன்? இந்த வட்டி விகித குறைப்பு பிளோட்டிங் ரேட் அடிப்படையில் கடன் வாங்கியர்களுக்கு EMI குறையும் அல்லது கடன் காலம் குறைவதன் மூலம் பலன் தரும். உதாரணமாக ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் (20 ஆண்டு)க்கு மாத EMI ரூ.2,000 வரை குறைய வாய்ப்புள்ளது. புதிய கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் குறைவாக கிடைக்கும். இது வீடு, கார் வாங்குவோருக்கு உதவும்.

No comments