Breaking News

23/12/2025 மற்றும் 05/01/2026 அன்று விடுப்பு எடுக்கலாமா? - Leave Rules

 


நண்பர்களே வணக்கம் 🙏

வழக்கமாக ஒவ்வொரு முறையும் வரும் சந்தேகம் 😊

ஆசிரியர்களுக்கு..

1) 23/12/25 ஒரு நாள் விடுப்பு வேண்டும் எனில் EL எடுக்கலாம்..

2) 24/12/25 முதல் 4/1/26 வரை 12 நாட்கள் விடுமுறை , எனவே 23/12/25 CL எடுக்க இயலாது.

3) CL + holiday 10 நாட்கள் மேல் அனுமதி இல்லை..

4) 22/12 & 23/12 இரண்டு நாட்களுக்கும் விடுப்பு வேண்டும் எனில்  EL எடுக்கலாம் ( இரண்டு நாட்கள் மட்டும் EL ஆகும்) 

20/12 & 21/12 சனி ஞாயிறு முன் அனுமதி...

24/12 முதல் 4/1/26 வரை விடுமுறை அனுமதி ..

Govt holiday + EL + vacation allowed (upto 180 days) 

 ( CL க்கு மட்டுமே 10 நாட்கள் வரையறை)

5) 5/1/26 ஒரு நாள் அல்லது 6/1/26 சேர்த்து இரண்டு நாட்களுக்கு விடுப்பு வேண்டும் எனில்  EL எடுக்கலாம் 


6) 5/1/26 & 6/1/26 இரண்டு நாட்களுக்கு ML எடுக்கலாமா? 


5 & 6 உடம்பு சரியில்லாமல் போகும் என்பதை இன்றே கணிக்க இயலாது 🤣🤪

7) ML முன் இணைப்பு மற்றும் பின் இணைப்பு உண்டா? 

ஆம்...ML ...( Unearned leave on MC) க்கு

மருத்துவர் சான்று வழங்கும் தேதி  முதல் விடுப்பு ஆரம்பம்..

மருத்துவர் fitness  வழங்கும் தேதி அன்று பணியில் சேர வேண்டும்..



8) தலைமை ஆசிரியர் , JA & Watchman ( இருப்பின்) போன்ற கோடை விடுமுறை அற்ற பணியாளர்கள்... 

23/12 CL எடுக்கலாம்

24 & 31 RL எடுக்கலாம்...

( 24, 26, 29, 30, 31 & 2/1/26 பணி நாள் தான்) 

அவர்கள் 5,6 விடுப்பு வேண்டும் எனில் CL எடுக்கலாம்...

சிறப்பு நிகழ்வு

9) College AP TRB 27/12/25 நடைபெறுகிறது... 

அதில் தங்களுக்கு (ஆசிரியர்கள் ) பணி எனில் 

22, 23 CL or 5, 6 CL தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் 😊 ( on duty உம் பணியாக தான் கருத வேண்டும் )



No comments