தங்கம் விலை சரிவு.. ஓரே வாரத்தில் ரூ.1200 வீழ்ச்சி..வெள்ளி நிலவரம் என்ன.. இன்னும் குறையுமா?
கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது காலை அமர்வில் தடுமாற்றத்தில் இருப்பதும், மாலை அமர்வில் ஏற்றம் காண்பதுமாக இருந்து வருகின்றது.
தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் கடந்த வாரத்தின் உச்சத்தில் இருந்து 1300 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.
மத்திய பட்ஜெட் 2022ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களில் ஒன்று தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பு. ஆனால் அப்படி ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. இது தங்க ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை கொடுத்தது.
ஏற்றம் காணலாம்
தங்கம் விலையானது பெரியளவில் குறையாவிட்டாலும், தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து 1800 டாலர்களுக்கும் மேலாகவே இருந்து வருகின்றது. இது தங்கம் விலையானது சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையே ஏற்படுத்தியுள்ளது.
வலுவான டாலர் மதிப்பு
கடந்த சில தினங்களாக
அமெரிக்க டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்ட நிலையில் , தங்கம் விலையானது
ஏற்றம் கண்டு வந்தது. எனினும் தற்போது அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு,
வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலை, உள்ளிட்ட பல
காரணிகளுக்கும் மத்தியில் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றத்தினை
காணவில்லை.
மத்திய் வங்கிகளின் நடவடிக்கை
ஐரோப்பிய
மத்திய வங்கியானது, பணவீக்கம் அதிகரித்டு வரும் நிலையில் விரைவில் வட்டி
விகிதத்தினை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவின்
ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை மார்ச் மாதம் உயர்த்தலாம் என்று
எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐரோப்பிய வங்கியும் உயர்த்தினால், அது
தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் அச்சம்
மீடியம் டெர்மில் தங்கம்
விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க
பணவீக்கம் என்பது முக்கிய காரணமாக அமையலாம். மேலும் தொடர்ந்து கச்சா
எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வந்த நிலையில், இதுவும் பணவீக்கம்
அதிகரிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஆக சர்வதேச அளவில்
முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம்
திரும்பலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
அரசியல் பதற்றம்
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது பெரும் பதற்றம் அளிக்கும் வகையில் இருந்து வருகின்றது. ரஷ்யா மேற்கொண்டு உக்ரைனுக்கு நெருக்கடியினை கொடுத்தால், அதனால் அமெரிக்கா மேற்கொண்டு பொருளாதார தடையினை ஏற்படுத்தலாம். இது சர்வதேச அளவில் பெரியளவிலான பிரச்சனையை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில்
தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது
அவுன்ஸூக்கு 4.00 டாலர்கள் குறைந்து, 1806.30 டாலர்களாக வர்த்தகமாகி
வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே
தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும்
உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில்
இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையை
போலவே, வெள்ளி விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு
சற்று குறைந்து, 22.552 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு
விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. எனினும்
குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி
விலையானது மீடியம் டெர்மில் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின்
எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்தே
காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 94 ரூபாய் குறைந்து, 47,990 ரூபாயாக
வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று
சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த
விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும்
நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின்
எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்தே
காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 94 ரூபாய் குறைந்து, 47,990 ரூபாயாக
வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று
சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த
விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும்
நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில்
தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கம் விலையும் இன்று சற்று
அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின்
விலையானது, கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 4,536 ரூபாயாகவும், இதே
சவரனுக்கு 176 அதிகரித்து, 36,288 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு
வருகின்றது.
No comments