Breaking News

சுகருக்கு குட் பை… இந்த 5 பழங்களை ஒருபோதும் மிஸ் பண்ணாதீங்க!

ஆரோக்கியமான மனிதனின் உடலில், இரத்த சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவு சமநிலை தவறும்போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாப்பிடும் உணவுதான் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீண்ட காலமாக ரத்த குளுக்கோஸ் அதிகளவில் இருந்தால், இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் பார்வை இழப்பு ஆகியவை ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளன.

இனிப்புகளை குறைப்பது உங்கள் சர்க்கரையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த சில பழங்கள் வியக்கத்தக்க வகையில் பயனுள்ள தேர்வுகளாக இருக்கலாம்.

அந்த வகையில், ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க ஐந்து பழங்களை ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்துள்ளார்.

  1. ப்ளாக்பெர்ரி பழம்

ரத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புவோர், கோடைக்காலத்தில் நிச்சயம் ஒரு கின்னம் நிறைய இருக்கும் ப்ளாக்பெர்ரி பழத்தை வேண்டாம் என கூற மாட்டார்கள். ப்ளாக்பெர்ரியில் மிகக் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) 25 உள்ளது.

கிளைசெமிக் இண்டெக்ஸ் உணவுகளில் ரத்த சர்க்கரையை எவ்வளவு அதிகரிக்கின்றன என்பதை அளவிடும் அளவுகோலாகும்.

1 முதல் 55 மதிப்பெண்கள் உள்ள உணவுகள் குறைந்த-ஜிஐ, 56 மற்றும் 69 க்கு இடையில் உள்ளவை நடுத்தர-ஜிஐ, 70-க்கும் மேற்பட்டவை உயர்-ஜிஐ ஆகும். மாம்பழம், திராட்சையில் அதிக ஜிஐ உள்ளது.

குறைந்த கிளைசெமிக் எண்ணைத் தவிர,ப்ளாக்பெர்ரியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.அதிக நார்ச்சத்துள்ள உணவு, வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

  1. பெர்ரி பழம்

பெர்ரி பழங்களில் 3.5 கிராம் நார்ச்சத்து, 53 என குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது. பல ஆய்வுகள் மதிப்பின்படி, இண்டிகோ நிறமுள்ள பெர்ரி பழங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. காட்டு

பெர்ரி பழங்களின் தோற்றம் சிறியதாக இருப்பதால், அவற்றின் தோலில் நார்ச்சத்து உள்ளது. 6 கிராமுக்கு மேல் நார்ச்சத்து இருப்பதால், ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளன.

  1. ஆப்பிள்

ரத்து சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் ஆப்பிள் தினசரி பழமாக இருக்கிறது. அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த ஜிஐ மதிப்பெண்களுடன், ஆப்பிளில் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன. நியூட்ரியண்ட்ஸ் இதழில் 2016 ஆம் ஆண்டின் மதிப்பாய்வின்படி, பாலிபினால்கள் இன்சுலின் உற்பத்தியைத்

தூண்டவும், ரத்தச் சர்க்கரைக் குறையாமல் இருக்கவும் உதவுகிறது.

  1. தக்காளி

நிச்சயம் உங்கள் மனதில் தோன்றும் தக்காளி காய்கறியா இல்லை பழமானு.நிச்சயம் தக்காளி பழம் தான்.

ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதில், தக்காளி பழம் குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் ஆகும். தக்காளியில் ஜிஐ அளவு குறைவாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதால், ரத்த குளுக்கோஸை கணிசமாக உயர்த்தாது

ஆனால், தக்காளி சாஸ் மற்றும் பிற தக்காளி சார்ந்த தயாரிப்புகளில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மறவாதீர்கள். அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைப் பயன்படுத்த ரா

தக்காளிகளை தேர்ந்தெடுங்கள்.

  1. ஆரஞ்சு
ஆரஞ்சு ஜூஸ் நிச்சயமாக ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் ஆனால் முழு பழத்தின் கதை வேறு ஆகும். அவற்றின் சரியான கிளைசெமிக் இண்டெக்ஸ் ஸ்கோர் பல்வேறு வகைகளைப் பொறுத்து ஆகும். பெரும்பாலும், அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் ஸ்கோர் 33 மற்றும் 52 க்கு இடையில் உள்ளது. அழற்சி எதிர்ப்பு வைட்டமின் சி மற்றும் ஏராளமான பிற ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் ஆகியவை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

No comments