Breaking News

சுகர் பிரச்னை: இரவில் இந்த ட்ரிங்க் சாப்பிடுங்க; அப்புறம் ரிசல்ட் பாருங்க!

உலகம் முழுவதும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையை தவறும்போது இந்த நோய் ஏற்டுகிறது. இதை கட்டுப்படுத்த இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை தங்களது உணவுப்பட்டியலில் சேர்த்தக்கொள்வது நல்லது.  கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு உங்கள் உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.

ஆனால் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பல உணவுகள் உள்ளன. இதேபோல், ஆப்பிள் சைடர் வினிகர் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

  ள் சைடர் வினிகர் ஆரோக்கிய நன்மைகளுடன் நிரம்பியுள்ளது. பொதுவாக உடல் எடை குறைப்புக் ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சைடர் வினிகர் சர்க்கரை நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது எவ்வாறு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆப்பிள் சைடர் வினிகரை எவ்வாறு குடிப்பது இந்த பதிவில் காண்போம்.

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் ஆப்பிள் சைடர் வினிகர் :

நீரிழிவு நோய்க்கான ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகளை பல ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளன. குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய்க்கு இது மிகவும் நல்லது. 2018 ஆம் ஆண்டில் ஜர்னல் ஆஃப் எவிடென்ஸ்-பேஸ்டு இன்டகிரேடிவ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகளை எடுத்துரைத்துள்ளது.

உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜஸ்லீன் கவுர் இது குறித்து அளித்துள்ள விளக்க உரையில்,”நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலினை உற்பத்தி செய்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான முறையில் நிர்வகிக்க முடியாத ஒரு நாள்பட்ட நிலையாகும். ஆப்பிள் சீடர் வினிகர் எடையைக் குறைக்கவும், பீர் தொப்பையைக் குறைக்கவும் உதவுவது மட்டுமல்லாமல், இரத்தச் சர்க்கரையைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்?

“நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தூங்குவதற்கு முன் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது நல்லது. தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை வெந்நீரில் எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயாளிக்கு பெரிய நன்மைகளை கொடுக்கும்.

சர்க்கரை நோய்க்கு ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி சாப்பிடுவது?

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், ஆப்பிள் சைடர் வினிகரை அதிகமாக உட்கொள்ள வேண்டும். ஆனால் இதனை நேரடியாக உட்கொள்ள வேண்டாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி வினிகர் சேர்க்கவும். உங்கள் உணவில் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்ப்பதற்கு முன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை சரிபார்க்கவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் உங்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும், ஆனால் நீங்கள் சரியான உணவு, வழக்கமான உடற்பயிற்சியை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக நிர்வகிக்க உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

No comments