நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான படிக்க வேண்டிய கதை படித்ததில் ரசித்தது இது சுவிஸ்லாந்தில் நடந்த ஒரு சம்பவம். ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தனது அம்மாவிடம் "வாழ்க்கையின் ரகசியம் என்ன?" என்று கேட்கிறான்:
நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான படிக்க வேண்டிய கதை படித்ததில் ரசித்தது இது சுவிஸ்லாந்தில் நடந்த ஒரு சம்பவம்.
ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தனது அம்மாவிடம் "வாழ்க்கையின் ரகசியம் என்ன?" என்று கேட்கிறான். 'எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது' என்று அம்மா சொல்கிறார்.
அன்று அவன் பள்ளிக்குச் செல்லும்போது ஆசிரியை மாணவர்களை பார்த்து 'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப் போகிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார்.
ஒரு பையன் 'டாக்டர்' ஒரு பையன் 'இன்ஜினியர்' இன்னொருவர் 'ஆசிரியர் ' என விதவிதமான பதில்கள் விதவிதமாக வந்தன.
ஆனால் இந்தச் சிறுவன் மட்டும் "நான் மகிழ்ச்சியாக இருக்க போகிறேன்" என்கிறான் .
ஆசிரியை கோபமாக ' உனக்குக் கேள்வி புரியவில்லை' என்றார். அதற்கு அந்த சிறுவனோ அமைதியாக ' உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை' என்றான்.
ஆம் வாழ்க்கை என்பது நாம் என்னவாக எதிர்காலத்தில் ஆகப் போகிறோம் என்பதில் இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.
தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நொடியில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் நம்மால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது வாழ்க்கை. மகிழ்ச்சியான செயல் எது என்பதை தேடித் தேடி அலைவதை விட செய்யும் ஒவ்வொரு செயலையும் மகிழ்ச்சியாக செய்தாலே போதும் நம் வாழ்க்கை எப்போதும் நிறைவானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்.
No comments