வருகிறது புதிய பென்சன் திட்டம்.. EPFO எடுக்கும் சூப்பர் முடிவு!!
புதிய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (EPFO) திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மாதம் 15000
ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு
புதிய பென்சன் திட்டத்தை கொண்டுவர EPFO பரிசீலித்து வருகிறது.தொழிலாளர் பென்சன் திட்டம்
1995 (EPS-95) கீழ் கட்டாயமாக கவர் செய்யப்படாத அமைப்புசாரா
தொழிலாளர்களுக்கும் இப்புதிய பென்சன் திட்டத்தை கொண்டுவர EPFO திட்டமிட்டு
வருகிறது.
தற்போதைய சூழலில், மாதம் 15000
ரூபாய் வரை அடிப்படை சம்பளம் வாங்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும்
தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,
15000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுவோருக்கு புதிய பென்சன்
திட்டத்தை கொண்டுவர EPFO திட்டமிட்டு வருகிறது.இதுகுறித்து EPFO அதிகாரி
ஒருவர், “அதிக பங்களிப்பு செலுத்துவோருக்கு அதிக பென்சன் வழங்க வேண்டு என்ற
கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. எனவே, மாதம் 15000 ரூபாய்க்கு மேல் அடிப்படை
சம்பளம் பெறுவோருக்கு புதிய பென்சன் திட்டத்தை கொண்டுவர பரிசீலனை
இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் குழு
கூட்டம் கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. இதில் புதிய பென்சன் திட்டம் குறித்த முன்மொழிதல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments