மூத்த குடிமக்களுக்கு 3 வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட்டிற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் எவை?
மூத்த குடிமகன்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டங்களை பல வங்கிகளும் அறிமுகப்படுத்தி வருகின்றன. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அந்த திட்டங்களின் கீழ் சேமிக்கும் போது அதிக வட்டி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்களுடைய சேமிப்பில் ஒரு பகுதியை வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக சேமித்து வைக்கும் போது, நாட்டின் பணப்புழக்கத்திற்கு மட்டுமின்றி அவர்களுடயை வட்டி வருமானம் அதிகரிப்பதையும் உறுதி செய்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முக்கிய ரெப்போ விகிதத்தை 4 சதவீத குறைந்தபட்சமாக மாற்றாமல் வைத்துள்ளது. பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. ஆனால், சிறிய தனியார் வங்கிகள், மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட்களில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் தனியார் வங்கிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
1. பந்தன் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7 சதவீத வட்டியை வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அது மூன்று ஆண்டுகளில் ரூ.1.23 லட்சமாக அதிகரிக்கும்.
3. ஐடிஎஃப்சி மற்றும் இன்டஸ் இன்ட் வங்கி:
இந்த இரண்டு வங்கிகளும் மூத்த குடிமக்கள் மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்யும் தொகைக்கு 6.50 சதவீத வட்டியை வழங்குகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.21 லட்சமாக அதிகரிக்கும்.
4. டிசிபி பேங்க்:
மூத்த குடிமக்கள் மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தால், அதற்கு இந்த வங்கி 6.45 சதவீத வட்டி கொடுக்கிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் ஒரு லட்சம் ரூபாயானது 3 ஆண்டுகளில் ரூ.1.21 லட்சமாக உயரும்.
5. ஆக்சிஸ் வங்கி:
மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தால், அதற்கு இந்த வங்கி 6.05 சதவீத வட்டி கொடுக்கிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் ஒரு லட்சம் ரூபாயானது 3 ஆண்டுகளில் ரூ.1.19 லட்சமாக உயரும்.
சிறிய தனியார் வங்கிகள் புதிய வைப்புகளைப் பெற அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.
No comments