Breaking News

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜாக்பாட்... போட்டி போட்டுக்கொண்டு அதிக வட்டி தரும் வங்கிகள்!


இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்தியாவிற்குள் வாழும் குடிமக்களுக்கு அவரது வங்கி சேமிற்கு எவ்வாறு வட்டி மற்றும் வரி விலக்கு அளிக்கப்படுகிறதோ, அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகள், வங்கி டெபாசிட்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சேமிப்பு கணக்குகள் மற்றும் டெபாசிட்டிற்கு இந்தியாவில் உள்ள பல வங்கிகள் அதிக வட்டி கொடுக்கின்றன. இந்த வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த வங்கிகளும், இங்குள்ள வெளிநாட்டு வங்கிகளும் அடங்கும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு வீடு, நிலம் என பலவகையிலும் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர். அவற்றை வாடகைக்கு விட்டு மாதந்தோறும் பெரும் தொகையை சம்பாதிக்கின்றனர்.

அப்படி வாடகையாக சம்பாதிக்கும் பணம், சம்பளத்தில் ஒருபகுதி என பலவற்றையும் இந்தியாவில் உள்ள வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர். வெளிநாட்டு பணம் அல்லது இந்திய ரூபாயில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணத்தை சேமிக்கலாம். அவ்வாறு சேமித்து வைத்திருக்கும் பணத்தை இந்திய ரூபாயாக எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும்.

அத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக வங்கிகள் குடியுரிமை பெறாத சாதாரண (NRO) சேமிப்புக் கணக்குகளை திறக்கும் வசதி உள்ளது. சேமிப்புக் கணக்கு குறைந்த வட்டியை மட்டுமே கொடுக்கும், அதே தொகையை குடியுரிமை பெறாத சாதாரண டெபாசிட்டாக சேமிக்கும் போது அதிக வட்டி கிடைக்கும்.

ஆர்பிஎல் பேங்க்:

2 முதல் 3 வருட டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 6.3 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளில் ரூ.1.13 லட்சமாக உயரும். தனியார் வங்கிகளில், இந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.

பந்தன் மற்றும் எஸ் பேங்க்:

இந்த இரண்டு வங்கிகளும் 2 முதல்3 வருடத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு 6.25 சதவீத வட்டி கொடுக்கிறது. பந்தன் மற்றும் யெஸ் வங்கியில் குறைந்தபட்ச முதலீடு செய்ய ரூ.1,000 மற்றும் ரூ.10,000 போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டஸ்இண்ட் பேங்க்: 2 முதல் 3 வருடங்களுக்கு செய்யப்படும் டெபாசிட்டிற்கு 6.3 சதவீத வட்டியை வழங்குகிறது. இதில் இரண்டு வருடத்திற்கு ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால், முடிவில் ரூ.1.12 லட்சமாக உயரும்.

டிசிபி பேங்க்: 2 முதல் 3 வருடங்களுக்கு செய்யப்படும் டெபாசிட்டிற்கு 5.95 சதவீத வட்டியை வழங்குகிறது. இதில் இரண்டு வருடத்திற்கு ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால், முடிவில் ரூ.1.12 லட்சமாக உயரும்.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்: 2 முதல் 3 வருட எஃப்டிகளுக்கு ஆண்டுக்கு 5.75 சதவீத வட்டியை வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் இரண்டு ஆண்டுகளில் ரூ.1.12 லட்சமாக வளரும்.

இவற்றை தவிர பல சிறிய அளவிலான தனியார் வங்கிகள் புதிய டெபாசிட்களைப் பெற அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) ஆகியன ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கு (fixed Deposite) அதிக வட்டியை வழங்குகின்றன.


No comments