Breaking News

செப்.15ற்குள் I.T Return e-File : ஏன்? எதற்கு? யாருக்கு?

 


 செப்.15ற்குள் I.T Return e-File : ஏன்? எதற்கு? யாருக்கு?

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

தனிநபர்களின் வங்கி / அஞ்சலக வரவுகள், சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பணப்புழக்கத்தையும் அவர்களது PAN வழியே கண்காணிக்கும் வருமானவரித் துறையின் பணி தற்போது 100% கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட PAN தொடர்புடைய அனைத்து வரவுகள் & செலுத்தப்பட்ட வரிகள் அவரது கணக்கில் நிதியாண்டு வாரியாகத் தானாகவே  சேர்த்துக்கொள்ளப்படும்.

மேலும், மாத வருமானம் வழங்கும் நிறுவனம் / அலுவலகம் வாயிலாக மேற்கொள்ளப்படும் TDSன் நிறைவுக் கட்டமான Form16 பணி முடிவடைந்ததும் ஊழியர்களின் ஆண்டு வருமானம் & பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி உள்ளிட்ட விபரங்கள் யாவும் PAN கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டுவிடும்.

மேற்கண்ட நடைமுறைகளின் வாயிலாக சேர்க்கப்பட்ட விபரங்களைச் சார்ந்த PAN உரிமையாளர் சரிபார்த்து, கூடுதலாக வரி செலுத்த வேண்டுமெனில் அதையும் செலுத்தி ஒரு நிதியாண்டிற்கான தனது வருமானம் & வரி செலுத்திய விபரங்களை வருமானa வரித்துறையிடம் Onlineல் சமர்ப்பிக்கும் முறைதான் (ITR / I.T Return) Income Tax Return e-File என்று பெயர். 

ஒவ்வொரு முடிவடைந்த நிதியாண்டிற்கும்,  ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமானவரித் துறையின் இணையப் பக்கத்தில் PAN எண் மூலம் Login செய்து I.T Return பணியை நிறைவு செய்ய வேண்டும். 2024-25 நிதியாண்டிற்கான I.T Return செய்ய செப்டம்பர் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

யாரெல்லாம் I.T Return செய்ய வேண்டும்?

PAN வைத்துள்ள அனைவரும். மற்றவர்களுக்கு எப்படியோ, Tax வந்தாலும் வராவிட்டாலும் அரசு & தனியார் நிறுவன மாத ஊதியதாரர்கள் அனைவரும் கட்டாயம் I.T Return e-file செய்தாக வேண்டும்.

I.T Returnக்கும் அலுவலகங்களுக்கும் தொடர்பு உண்டா?

100% இல்லை. I.T Return செய்து தருவதற்கும் அலுவலகங்களுக்கும் எவ்விதத் தொடர்போ கட்டாயமோ இல்லை. இப்பணி 100% தனி நபரைச் சார்ந்ததே. I.T Return செய்யவில்லை எனில், தனிநபர்தான் பொறுப்பேற்றாக வேண்டும்.

வருமானவரித் துறை தற்போது முழுமையாகக் கணினிமயமாகிவிட்டதால் இனி அனைத்து PANகளும் I.T Return செய்யப்பட்டுவிட்டதா என்பது 100% கண்காணிக்கப்படும்.

I.T Return செய்யலேனா என்ன இப்ப?

2024-25 நிதியாண்டிற்கு 15.09.2025ற்குள் I.T Return செய்யவில்லை எனில், 5 லட்சத்திற்குக் கீழ் நிகர வருமானமுள்ளோருக்கு (Taxable Income) ரூ.1,000/-மும் அதற்கு மேலுள்ளோருக்கு ரூ.5,000/-ம் U/S.234Fன் படி தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதே போன்று தாமதமாக ITR செய்யும் நேர்வுகளில் ஊதியமற்ற கூடுதல் வருமானத்திற்கு வருமான வரியும் கூடுதலாகக் கட்ட வேண்டியதாக இருந்தால், வரியில் 1%ஐ வட்டியாக, தாமதமான ஒவ்வொரு மாதத்திற்கும் U/S.234Aன் படி செலுத்தியாக வேண்டும்.

I.T Return செய்வது எப்படி?

https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login என்ற இணைப்பில் Login செய்து,

--> e-File

--> Income Tax Returns

--> File Income Tax Return' link 

--> Assessment Year [2025-26]

--> Select Mode of Filing [Online]

--> Continue

--> Start New Filing

--> Individual

--> Continue

--> ITR Form [மாத ஊதியதாரருக்கு ITR - 1]

--> Proceed with ITR - 1

--> OK

--> Let’s get Started

--> Taxable income is more than basic exemption limit / Others 

--> Continue

--> OK

என்ற வரிசையில் தேர்வு செய்து அடுத்து வரும் Return summaryல்

* Personal Information (சுய விபரங்கள், வங்கி விபரம்)

* Gross Total Income

* Total Deductions

* Tax Paid

* Verify your tax liability details

உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து தேர்வு செய்து இறுதியாக ஆதார் OTP மூலம் e-verification செய்து I.T Returnன் e-File பணியை 5 - 10 நிமிடங்களில் நிறைவு செய்துவிடலாம்.


I.T Return செய்வதற்கான USED ID / Password என்ன?


உங்களது PAN எண் தான் User ID. முதன் முதலாகச் செய்பவர் முதலில் அந்த எண்ணையும், வங்கி விபரங்களையும் Register செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் PAN இணைக்கப்பட வேண்டும். இவற்றிற்கான Link அந்த வலைப்பக்கத்திலேயே இருக்கும்.


முன்னதாக I.T Return செய்யப்பட்டிருப்பின் User ID அளித்து Continue செய்தபின் Password அளித்து Login செய்யலாம். தேவையான போது தொடர்பு எண் & மின்னஞ்சல் முகவரிகளை மாற்றிக் கொள்ளலாம். IT & ITR குறித்த தகவல்கள் இதன் வழியாக நமக்கு அனுப்பப்படும்.


Password மறந்துவிட்டால் என்ன செய்வது?


Forget password கொடுத்து ஆதார் OTP மூலம் புதிய Passwordஐ உருவாக்கிக் கொள்ளலாம் & தேவையான போது மாற்றியும் கொள்ளலாம்.


I.T Return செய்யத் தேவையான ஆவணங்கள் என்னென்ன?


Form16 அல்லது I.T Form அல்லது 26AS உள்ளிட்டவையே போதுமானது. தனிநபரது வருமானம் & கழிவுகளைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் தனிப்பட்ட சரிபார்ப்பிற்காகத் தேவைப்படலாம். மற்றபடி எந்தவொரு ஆவணத்தையும் பதிவேற்ற வேண்டிய தேவை இல்லை.


I.T Return செய்ய பணம் செலுத்த வேண்டுமா?


I.T Return என்பது 100% கட்டணமற்ற நடைமுறையாகும். இப்பணியை செல்லிடபேசியிலேயே தனிநபர் தானாகச் செய்துவிட முடியும். தனிநபர் தங்களால் செய்ய இயலாமல், இதனையே தொழிலாகச் செய்துவருவோரை நாடினால் அவர்கள் நிர்ணயிக்கும் தொகையைச் செலுத்தியாகத்தான் வேண்டும்.


I.T Returnன் போது மீண்டும் வரி கட்டும்படி கூறுகிறதே ஏன்?

<


Form16ல் உள்ள மாத வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்தி இருப்போம். இது நீங்களான இதர வருமானங்களையும் (சேமிப்பு / முதலீடு / காப்பீட்டிற்கான வட்டி / முதிர்வுத் தொகை) நமது PAN பயன்பாட்டின் மூலம் Income from other sources என நமது கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றை நமது வருமானத்துடன் சேர்த்து கூடுதல் தொகைக்கு வரி செலுத்தும்படி காட்டும்.


கூடுதல் வரியை எப்படிச் செலுத்த வேண்டும்?


I.T Return செய்யும் போதே 5 Summaryகளை முடித்து அடுத்த படிநிலைக்குச் செல்லும் போதே அதற்கான வசதி இருக்கும். Debit Card, UPI போன்றவற்றின் மூலம் வரியைச் செலுத்தி அதற்கான இரசீதினைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.


ஒட்டுமொத்த வருமானத்தை விடக் கூடுதலாகக் கட்டிய வரி எப்போது கிடைக்கும்?


PAN மூலம் எப்படி வருமானங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அதேபோன்று PAN பயன்படுத்தி வேறு வகைகளில் வரி செலுத்தி இருப்பின் அவையும் கணக்கில் கொள்ளப்பட்டு, I.T Return e-file செய்து முடித்த ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரித்தொகை இத்தளத்தில் Validation செய்திருந்த வங்கிக் கணக்கில் வரவாக்கப்பட்டுவிடும்.


I.T Return செய்தபின் பெங்களூரு I.T அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமா?


ஆதார் OTP மூலம் e-verification முடித்துவிட்டால் பெங்களூருவிற்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை.


ஆதார் இல்லாமல் e-verification செய்ய முடியுமா?


முன்னதாக வங்கிக் கணக்கை இத்தளத்தில் Validation செய்திருந்தால், வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்லிடபேசிக்கு OTP அனுப்பி e-verificationஐ முடிக்கலாம்.


கட்டுன வரிய திருப்பி வாங்கித் தருவதா சொல்றாகளே?


வருமான வரிச் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டுதான் உங்களது அலுவலகத்தில் வரிப்பிடித்தம் செய்யப்பட்டு Form16 வழங்கப்பட்டிருக்கும். அதனை விடுத்து சட்டத்திலுள்ள வழிமுறைகளைத் தவறாகக் கையாண்டு Refund பெற்றுத் தருவதாகக் கூறுவதை நம்ப வேண்டாம். Form16ல் இல்லாத கழிவுகளை I.T Return e-fileல் மேற்கொள்வது என்பது வருமான வரித்துறையின் நேரடியான & கடுமையான கண்காணிப்பிற்கு உட்பட்டது. சுருக்கமா சொல்லனும்னா உன்ன எப்புடி ஏமாத்துறேன் பார்த்தியானு ஏமாந்தவரை Tag பண்ணி இன்டாகிராமில் லைவ் ரீல் போடுவதைப் போன்றது. கவனம்.


I.T Return e-file தொடர்பாக இப்பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் பார்ப்பதற்கு வேண்டுமானால் குழப்பமாகவோ / மலைப்பாகவோ இருக்கலாம். இது சார்ந்த காணொளிகள் பல Onlineல் உள்ளன. அதை ஒருமுறை பார்வையிட்டாலே போதும், இது ஒரு பெரிய வேலையாகத் தெரியாது.


நமது வரிகளால் தேசத்தைத் தாங்கும் நாம், நாம் செலுத்திய (/விலக்கு அளிக்கப்பட்ட) வரி & வருமான விபரங்களையும் ஆவணப்படுத்தி வருமான வரிச் சட்டம் சார்ந்த நமது பொறுப்பை முழுமைப்படுத்துவோம்.


கற்போம்! கற்பிப்போம்!!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

No comments