TET: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஸ்…
உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்தது. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் எட்டாம் வகுப்பு வரை பயில வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது.
தனையடுத்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் வகையில், டெட் (Teachers Eligibility Test) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பாடம் நடத்துவதற்கு பணி அமர்த்தப்பட்டனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் TET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதாமல், தொடர்ந்து பணியில் இருந்துவந்தனர். இந்தச் சூழலில்தான் உச்சநீதிமன்றம் சமீபத்தில் டெட் தேர்வு விவகாரத்தில் தீர்ப்பளித்தது
அந்தத் தீர்ப்பில் டெட் தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதனால், தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டுக்கு முன்பு, பணியில் சேர்ந்த சுமார் 1.70 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில் 2025ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பு வெளியாகி நேற்றோடு (10ஆம் தேதி) விண்ணப்பம் பதிவு செய்வது முடிவுற்றது.
இந்நிலையில், டெட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
No comments