Breaking News

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு..பழைய ஓய்வூதிய திட்டம்! எப்போது வெளியாகிறது அறிவிப்பு? கசிந்த தகவல்

 


பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அமைத்த ககன்தீப் சிங் பேடி குழு இந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அடுத்த மாதமே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் தான் அமலில் இருந்தது. அதாவது அரசு பங்களிப்போடு அவர்களது ஊதியத்தில் ஒரு பகுதி ஓய்வூதியமாகவும், பணிக்கொடையாகவும் வழங்கப்படும்.

இந்த நிலையில் இதில் சில மாற்றங்களை செய்து 2023 மத்திய அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதனால் அரசு ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

Old Pension Scheme in Tamil Nadu

பழைய ஓய்வூதிய திட்டம்

தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டமே அமல்படுத்தப்பட்டது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடியும் தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தான் அமலில் இருக்கிறது. பத்தாண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்குப் பிறகு 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அரசு ஊழியர்களின் வாக்குகளை கவர பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.

தமிழக அரசு

தொடர்ந்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் நான்கு ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2025 - 2026 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அப்போதாவது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக எதுவுமே சொல்லவில்லை.

அரசு ஊழியர்கள்

இதனால் ஏமாற்றம் அடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதாகக் கூறியதோடு, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை என்றால் கோட்டை நோக்கி முற்றுகைப் பேரணி நடைபெறும் என அதிரடியாக அறிவித்தனர். 2026 இல் மார்ச் மாதத்திற்குப் பிறகு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும் என்பதால் 2025 ஆம் ஆண்டிலேயே பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ககன்திப் சிங் பேடி

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் ஆதரவு தேவை என்பதால் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தச் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய தமிழக அரசு, அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததோடு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களைச் சந்தித்துக் கருத்துகளைப் பெற்று வருகிறது.

முக ஸ்டாலின்

இந்த நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அந்தக் குழு தனது அறிக்கையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி பரிசாகப் பழைய ஓய்வூதியத் திட்டம் அல்லது அதற்கு இணையான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்திலேயே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் சங்கங்களும் அதனையே மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

 

 

No comments