Breaking News

8வது ஊதியக்குழு: லெவல் 1 - லெவல் 7 மத்திய அரசு ஊழியர்கள்.... யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு?

 


8th Pay Commission Salary Hike: 8வது சம்பளக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்தவுடன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஊழியர்களுக்கு தற்போது இருக்கும் முக்கிய கேள்வி தங்களது ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதுதான்.8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், ஊதிய மற்றும் ஓய்வூதிய உயர்வின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதை அறியும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருகின்றது. ஃபிட்மென்ட் ஃபாக்டர், HRA, TA மற்றும் பிற கொடுப்பனவுகள் உட்பட மொத்த பலன் எவ்வளவு இருக்கும் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள். ஊழியர்களுக்கான ஊதிய உயர்வின் ஒரு தோராயமான மதிப்பீட்டை இந்த பதிவில் காணலாம்.

8வது சம்பளக் குழுவின் அடிப்படையில் ஒரு மதிப்பிடப்பட்ட கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம். 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், குறைந்தபட்சமாக 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரை இங்கே கணக்கீட்டிற்கு எடுத்துக்கொண்டுள்ளோம். இதில் 0% அகவிலைப்படி (DA), X நகரத்திற்கு 30% HRA மற்றும் பெரிய நகரங்களுக்கு அதிக TPTA ஆகியவை அடங்கும். இந்த புள்ளிவிவரங்கள் முழுமையாக மதிப்பிடப்பட்டுள்ளவை என்பதை நினைவில் கொள்வது நல்லது. இறுதி முடிவு சம்பளக் குழுவின் பரிந்துரைகளைப் பொறுத்தது.

Salary Hike: சம்பள உயர்வு கணக்கீட்டில் உள்ள காரணிகள்

8வது சம்பளக் குழுவின் இந்த மதிப்பிடப்பட்ட கணக்கீட்டில், 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அகவிலைப்படி (DA) 0% ஆகக் கருதப்படுகிறது. புதிய ஊதியக்குழு செயல்படுத்தப்படும்போது அப்போதிருக்கும் அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படும். இந்த காரணத்தால், அகவிலைப்படி 0% ஆக எடுத்துக்கொள்ளபட்டுள்ளது. இது தவிர, X நகரத்திற்கான 30% HRA மற்றும் பெரிய நகரங்களுக்கான உயர் TPTA இன் கீழ் TA ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

Level 1 to Level 3 Employees:

லெவல் 1 முதல் லெவல் 3 வரையிலான ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மதிப்பீடு

லெவல் 1 

- நிலை-1 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 இலிருந்து ரூ.34,560 ஆக அதிகரிக்கலாம். 

- இதனுடன் ரூ.10,368 HRA மற்றும் ரூ.1,350 TA ஆகியவற்றைச் சேர்த்த பிறகு, அவர்களின் மொத்த சம்பளம் ரூ.46,278 ஆக உயரும். 

- NPS மற்றும் CGHS போன்ற கழித்தல்களுக்குப் பிறகு, அவர்களின் நிகர சம்பளம் சுமார் ரூ.42,572 ஆக இருக்கும்.

லெவல் 2

- நிலை-2 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.19,900 இலிருந்து ரூ.38,208 ஆக அதிகரிக்கும். 

- HRA மற்றும் TA ஐச் சேர்த்த பிறகு, அவர்களின் மொத்த சம்பளம் ரூ.51,020 ஆகவும் நிகர சம்பளம் ரூ.46,949 ஆகவும் இருக்கும்.

லெவல் 3

- நிலை-3 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.21,700 லிருந்து ரூ.41,664 ஆக உயரும். 

- HRA மற்றும் TA ஐ சேர்த்த பிறகு, அவர்களின் மொத்த சம்பளம் ரூ.57,763 ஆகவும், நிகர சம்பளம் ரூ.53,347 ஆகவும் உயரும்.

Level 4 to Level 5 Employees:

லெவல் 4 முதல் லெவல் 5 வரையிலான ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மதிப்பீடு

லெவல் 4

- நிலை-4 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.25,500 லிருந்து ரூ.48,960 ஆக அதிகரிக்கும். 

- இதனுடன் HRA மற்றும் TA ஐ சேர்த்த பிறகு, அவர்களின் மொத்த சம்பளம் ரூ.67,248 ஆகவும், நிகர சம்பளம் ரூ.62,102 ஆகவும் இருக்கும்.

லெவல் 5

- நிலை-5 இல் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.29,200 லிருந்து ரூ.56,064 ஆக அதிகரிக்கலாம்.

- HRA மற்றும் TA ஐ சேர்த்த பிறகு, அவர்களின் மொத்த சம்பளம் ரூ.76,483 ஆகவும், நிகர சம்பளம் ரூ.70,627 ஆகவும் அதிகரிக்கும்.

லெவல் 6

- நிலை-6 ஊழியர்களுக்கு இந்த அதிகரிப்பு இன்னும் பெரியதாக இருக்கும். 

- அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.35,400 லிருந்து ரூ.67,968 ஆக உயரும். 

- HRA மற்றும் TA உடன் அவர்களின் மொத்த சம்பளம் ரூ.91,958 ஆகவும், நிகர சம்பளம் ரூ.84,711 ஆகவும் இருக்கும்.

Level 7 Employees:

லெவல் 7 ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மதிப்பீடு

- நிலை-7 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.44,900 லிருந்து ரூ.86,208 ஆக அதிகரிக்கும். 

- HRA மற்றும் TA ஐ சேர்த்த பிறகு, அவர்களின் மொத்த சம்பளம் ரூ.1,15,670 ஆக இருக்கும். 

- வரி மற்றும் பிற விலக்குகளுக்குப் பிறகு, அவர்களின் நிகர சம்பளம் ரூ.99,739 ஆக இருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, நிலை-1 முதல் நிலை-7 வரையிலான ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு காணப்படும். அடிப்படை சம்பளத்தில் HRA மற்றும் TA சேர்க்கப்படும்போது இந்த அதிகரிப்பு இன்னும் அதிகமாகிறது.

8வது ஊதியக்குழு ஊதிய உயர்வு சுருக்கமாக.....

- 8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.

- மேலே கொடுக்கப்படுள்ள முழு கணக்கீடும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

- உண்மையான புள்ளிவிவரங்கள் 8வது ஊதியக் குழுவின் இறுதி பரிந்துரைகளைப் பொறுத்தது. 

No comments