Breaking News

8வது ஊதியக்குழு சூப்பர் அப்டேட்: விரைவில் அமலாக்கம், பம்பர் ஊதிய உயர்வு.... அரசு உத்தரவாதம்

 


லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழு குறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Implementation:8வது ஊதியக்குழுவை அமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மாதமே 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

ஊழியர்களின் சம்பளம் மற்றும் அலவன்சுகளில் திருத்தங்களை சரியான நேரத்தில் செயல்படுத்தும் வகையில் இந்த கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தபிறகு மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களில் மிகப்பெரிய அதிகரிப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஊழியர்களின் சம்பளம் மற்றும் அலவன்சுகளில் திருத்தங்களை சரியான நேரத்தில் செயல்படுத்தும் வகையில் இந்த கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தபிறகு மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களில் மிகப்பெரிய அதிகரிப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

8வது ஊதியக்குழுவை அமைக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த விஷயத்தில் மாநில அரசுகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக மோடி அரசு தெரிவித்துள்ளதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் 8வது ஊதியக் குழு தீர்மானிக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பொறுத்து இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 7வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இது 8வது ஊதியக்குழுவில் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கலாம் என பல நிபுணர்களின் கருத்துகள் மற்றும் மதிப்பிட்டுள்ளனர். 

1.92 முதல் 3.0 -க்குள் பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில், குறைந்தபட்ச சம்பளமான ரூ.18,000 வாங்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560 / 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440 / 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040 / 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260 / 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480 / 3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.54,000 

இது மட்டுமின்றி, ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஓய்வூதியத்திலும் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். இது ஓய்வூதியதாரர்களுக்கு வயதான காலத்தில் மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும். 

கமிஷன் அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் (BMS) இணைந்த தொழில்துறை கூட்டமைப்புகளின் உயர் அமைப்பான அரசு ஊழியர் தேசிய கூட்டமைப்பின் (GENC) பிரதிநிதிகள் குழு, கடந்த மாதம் மத்திய இணை அமைச்சர் (பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள்) டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தது. 

ஆகஸ்ட் 4 அன்று அமைச்சருடனான அவர்களின் சந்திப்பில், 8வது ஊதியக் குழுவின் தாமதம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுட்த்தல், தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை ரத்து செய்தல் மற்றும் கோவிட்-19 காலத்தில் நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விடுவித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை பிரதிநிதிகள் குழு எழுப்பியது.  

 

No comments