Breaking News

TET - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எழும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான AIPTF-ன் நடவடிக்கை குறித்த முன்னேற்ற அறிக்கை :

 


 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எழும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான AIPTF-ன் நடவடிக்கை குறித்த முன்னேற்ற அறிக்கை

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தலைவர்களின் அவசரக் கூட்டம் (TET பிரச்சினைகள் தொடர்பான சிறப்புக் குழு) செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைபெற்றது.

 இந்தக் கூட்டத்தில்,  தலைவர் திரு. பசவராஜ் குரிகர், பொதுச்செயலாளர் திரு. கமலா காந்த் திரிபாதி, இணைப் பொதுச் செயலாளர் திரு ரெங்கராஜன் மற்றும் அனைத்துக் குழு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்தவுடன், பல்வேறு சட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்க, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களை நிர்வாகிகள் குழுவினர் சந்தித்தனர். 

மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி, மொத்தம் 5 தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் முடிவு செய்யப்பட்டது. 

பூஜை விடுமுறைக்காக நீதிமன்றம் விடுமுறை என்பதால் செப்டம்பர் 27, 2025 க்கு முன் மறு சீராய்வு மனு, தாக்கல் செய்தல்.

2001 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு தனி வழக்கு.

2001 மற்றும் 2010 க்கு இடையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு தனி வழக்கு.

2010 முதல் தற்போது வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு தனி வழக்கு.

மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

ஆசிரியர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு ஏற்ப நிலைமைகளும் சூழ்நிலைகளும் மாறுபடுவதால், ஐந்து வெவ்வேறு வழக்குகளைப் பதிவு செய்வது அவசியம் உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதன்படி இந்த வழக்குகளை கையாள மூத்த வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும்.

திங்கட்கிழமை, AIPTF குழு மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானை சந்திக்கும்.

இந்த அனைத்து சட்ட செயல்முறைகளையும் மேற்கொள்வதற்கு கணிசமான நிதி செலவு தேவைப்படும். எனவே, அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதார எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி-

No comments