Breaking News

100 சதுரடி கொண்ட ரூம்-க்கு எத்தனை டன் ஏசி வேண்டும்? கணக்கு போடாம வாங்கிட்டா காசு ஹோகயா தான்..!!

 


ந்திய வானிலை துறை தகவலின்படி, இந்த வருடம் கோடை காலத்தில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வெயில் பொழந்துக்கட்டும் நிலையில் அக்னி நட்சத்திரம் வேற வருகிறது.எனவே, உங்கள் வீட்டுக்கு ஏற்ற ஏசியை நியாயமான விலையில் வாங்குவதை தாண்டி சரியான ஏசி வாங்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பிராண்ட், சரிவீஸ் எல்லாம் உங்க சாய்ஸ், ஆனால் ஒரு 100 சதுரடி கொண்ட ரூம்-க்கு எவ்வளவு ஏசி டன் கொண்ட ஏசி வாங்க வேண்டும்..?இது எளிய விஷயமாக இருக்கலாம், ஆனால் இதில் தான் சூட்சமம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் கரன்ட் பில்லை பதம் பார்ப்பது இது தான். தேவைக்கு அதிக டன் கொண்ட ஏசி வாங்கினால் பணம் வீண், குறைவான் டன் கொண்ட ஏசி வாங்கினால் யூஸ் இல்லை.

சரியான திறன் கொண்ட ஏர் கண்டிஷனரை (AC) தேர்வு செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.ஒரு ஏசியின் திறன் அளவை டன் (ton) என்ற அலகில் அளவிடப்படுகிறது. உங்க ரூம்-க்கு தேவைப்படும் திறனை விட குறைவான திறன் கொண்ட ஏசியை நீங்கள் வாங்கினால் தேவையான குளிர்ச்சியை வழங்க அதிக மின்சாரம் செலவழிக்கும்.குறைந்த திறன் கொண்ட ஏசி யூனிட்டுகள் முதலீட்டு தொகையில் உங்களுக்கு மிச்சப்படுத்தலாம், ஆனால் அது மின்சார செலவை அதிகரிப்பதுடன், ஏசியின் ஆயுட்காலத்தையும் குறைக்கும்.தேவைப்படும் திறனை விட அதிக திறன் கொண்ட ஏசியை நீங்கள் வாங்கினால், அதிக விலை கொடுத்து வாங்குவதுடன், அதிக மின்சார கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். சரியான டன் அளவை தேர்வு செய்வது உங்கள் பணத்திற்கு மிகச் சிறந்த பலனை அளிக்கிறது. உங்களுக்கு ஏற்ற ஏசி திறனை எவ்வாறு தேர்வு செய்து, கூடுதல் செலவு இல்லாமல் குளிர்ச்சியான கோடைக்காலத்தை அனுபவிக்க முடியும் என்பதைப் பார்ப்போம்.முதலில், உங்கள் அறையின் பரப்பளவைக் கண்டறியுங்கள்.

பின்னர் அதை 600 ஆல் வகுத்து அடிப்படை திறனைப் பெறுங்கள். உதாரணமாக, உங்கள் அறை 100 சதுர அடி என்றால், தேவையான அடிப்படை AC திறன் 0.167 டன்கள் (100 / 600) இருக்கும்.இப்போது, அறையில் ஒவ்வொரு ஐந்து பேருக்கும் அடிப்படை திறனில் 0.5 டன் சேர்க்க வேண்டும். பொதுவாக, 100 சதுர அடி அறைக்கு 0.8 டன் திறன் கொண்ட ஏசி போதுமானது.கவனிக்க வேண்டிய சில கூடுதல் காரணிகள் உள்ளன. "நீங்கள் கோடை காலத்தில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருக்கும் இடங்களுக்கு அருகில் வசித்தால், ஏசியில் இருந்து சிறந்த குளிர்ச்சியைப் பெற கூடுதலாக 0.5 டன் சேர்க்க வேண்டியிருக்கும்" என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும், உங்கள் கட்டிடத்தின் மேல் தளத்தில் நீங்கள் தங்கியிருந்தால், சற்று அதிக திறன் கொண்ட ஏசியை தேர்வு செய்வது நல்லது.100 சதுரடி கொண்ட அறைக்கு 0.8 டன், 150 சதுரடி கொண்ட அறைக்கு 1.0 டன், 250 சதுரடி கொண்ட அறைக்கு 1.5 டன், 400 சதுரடி கொண்ட அறைக்கு 2.0 டன் ஏசி தேவைப்படும்

No comments