ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஊட்டி,
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு மே 7ம் தேதி முதல் இபாஸ்
முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில்
கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே
இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்
காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின்
தாக்கம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில்
வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது
சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி
வருகிறது. மேலும் வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமான
நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாரும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாகவே பல
இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமான
ஈரோட்டில் வெயில் 107டிகிரியை கடந்து வருவதால் பொதுமக்கள் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயிலின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள
முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளவு சிறிய
அளவில் குறைந்துள்ளது.
வெயிலில்
இருந்து விடுபட்டு விடுமுறை தினத்தை கழிக்க சுற்றுத்தலங்களான ஊட்டி,
கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் படையெடுக்கத்
தொடங்கினர். இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா
பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த
வேண்டும் என வன சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் சென்னை
உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த இபாஸ் நடைமுறையை மே 7
ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல்
மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இ
பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க
தமிழ்நாடுஅரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இ
பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும் எனவும் உள்ளூர்
மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள்
தெரிவித்தனர். இ பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை
கொடுக்க வேண்டும் நீதிபதிகள் அறிவிறுத்தியுள்ளனர்.
ஊட்டி
பகுதிக்கு மட்டும் 20 ஆயிரம் வாகனங்கள் தினந்தோறும் வருவதாக தகவல்
தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில் ஒரேநாளில் இத்தனை வாகனங்கள் வந்தால்
எப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஊட்டியில் நிலவும் குடிநீர்
பிரச்சனைக்கும் அரசு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.
No comments