Breaking News

சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு கட்டணம் வரை!. நாளைமுதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!. முழு விவரம் இதோ!

 

புதிய நிதியாண்டின் முதல் மாதம் முடிவடைய உள்ள நிலையில், மே மாதம் முதல் பல விதிகள் மாறப்போகிறது.

இந்த மாற்றம் சாமானியர்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மே முதல் நாளில், எல்பிஜி சிலிண்டர் விலை முதல் வங்கிக் கணக்குக் கட்டணம் வரை பல விதிகளில் மாற்றங்கள் வர உள்ளன. தனிப்பட்ட நிதி அல்லது வங்கி தொடர்பான சில மாற்றங்களும் வர உள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைக்கின்றன. எனவே, மே மாதம் முதல் தேதி எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விலைவாசி உயர்வு ஏற்பட்டால், அது பொதுமக்களின் பாக்கெட்டில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

2024-25ஆம் நிதியாண்டு தொடங்கியாச்சு, ஆகவே உங்களது பான் கார்டு (PAN Card) உடன் ஆதார் கார்டு (Aadhaar Card) இணைக்கப்பட்டதை நீங்கள் உறுதி செய்திருக்க வேண்டும். ஏனென்றால், மே 31ஆம் தேதிக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த சூழலில் இப்போது புதிய அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த நிதியாண்டில் என்னென்ன விதிகள் அமலுக்கு வந்துள்ளன என்று பெரிய பட்டியலே போடலாம். கிரெடிட் கார்டு முதல் பான் கார்டு வரையில் புதிய விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. மே 1ஆம் தேதியில் இருந்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

ஆனால், பான் ஆதார் இணைப்பு (PAN Aadhaar Link) விதிகளே அதீத கவனம் பெற்றிருக்கிறது. ஏனென்றால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், அந்த பான் கார்டு செயலிழப்பு செய்யப்படுகிறது. இதனால், டிடிஎஸ் (TDS) செலுத்துவது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது. அதோடு மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் (Central Board of Direct Taxes) இருந்து விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த மாா்ச் 31ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளுக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ், பான்-ஆதார் இணைப்பட்டிருந்தால் அதிகமாக்கப்படாது. ஆகவே, பான்-ஆதார் இணைப்பை மே 31ஆம் தேதிக்குள் உறுதி செய்யுங்கள் தெரிவித்திருந்தது. இந்த காலக்கெடுவால், வரி செலுத்துவோர் அறக்க பறக்க பான்-ஆதார் இணைப்பில் மும்முரம் காட்டினர். ஆனால், அவர்களது வயிற்றில் பாலை வார்த்தது போல, இந்த காலக்கெடு ஜூன் 30ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகள் தங்கள் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணங்களில் கொண்டு வந்த மாற்றங்கள் மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் New Minimum Balance விதிகளை மே 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து Yes Bank ப்ரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ50,000 மினிமம் பேலன்சாக வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் ரூ1000 வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல எஸ் ப்ரோ ப்ளஸ் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ25000 மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ரூ750 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதேபோல எஸ் பேங்க் வாடிக்கையாளர்களை பொருத்தவரை “கிசான் சேமிப்பு கணக்கு” வைத்திருப்பவர்கள் ரூ5000ஐ குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும். தவறுபவர்களுக்கு ரூ500 வரை அபராதம் விதிக்கப்படும். விரைவில் மற்ற வங்கிகளிலும் இவை அமல்படுத்தப்படும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments