Breaking News

புதிதாக Google Pay அக்கௌன்ட் ஓபன் செய்வது எப்படி? இனி ரொக்கம் தேவையில்லை.. கையில் Mobile இருந்தால் போதும்..

 


ந்தியாவில் இப்போது எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ்களை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

சிறிய பெட்டிக்கடை முதல், ஸ்மார்ட்போன் வாங்கும் பெரிய கடைகள் வரை எல்லா இடங்களிலும் இப்போது கூகுள் பே (Google Pay) போன்ற ஆப்ஸ்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

மொபைல் போன் அல்லது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பணத்தை அனுப்பவும் மற்றும் பெறவும் கூகுள் பே (Google Pay) மிகவும் பயனுள்ள சாதனமாக மாறியுள்ளது. வெறும் சில நிமிடங்களில் பணபரிமாற்றத்தை எந்தவித சிக்கலும் இன்றி மிகவும் வேகமாக செய்து முடிக்க இந்த கூகுள் பே அம்சம் பெரிதும் உதவியாக இருக்கிறது.

கூகுள் பே (Google Pay):

அதேபோல், கடைக்காரர்கள் மற்றும் வணிகர்கள் QR கோடு மூலம் கட்டணங்களை இப்போது வசூலிக்க துவங்கிவிட்டார்கள். ரொக்கமாக பணத்தை கொடுத்து மீதம் சில்லறையை வாங்க காத்திருக்க வேண்டிய அவசியம் டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ்களில் இல்லை. சரியான கட்டணத்தை உள்ளிட்டு சில கிளிக்கில் கட்டணத்தை செய்து முடிக்க இந்த சேவை பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

பல கோடி மக்கள் இப்போது கூகுள் பே சேவையை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இன்னும் சிலர் இந்த சேவையை எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல் தத்தளித்து வருகிறார்கள். அவர்களுக்காக இந்த பதிவை உருவாக்கியுள்ளோம். எப்படி எளியமுறையில், ஒரு நபர் சில நிமிடங்களில் கூகுள் பே ஆப்ஸில் தனக்கென்று ஒரு சொந்த அக்கௌன்ட்டை ஓபன் செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

கூகுள் பே சேவையைப் பயன்படுத்தி, உங்களின் பயன்பாட்டுக் கட்டணங்களையும் நீங்கள் இப்போது சில சலுகைகளுடன் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உங்கள் குடும்பத்தினர் மொபைல் எண்களுக்கு தேவையான ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களையும் நீங்கள் கூகுள் பே மூலம் செய்துகொள்ளலாம். கேஸ் சிலிண்டர் கட்டணம், மின்சார கட்டணம், என்று இன்னும் பல சேவைகளை இப்போது கூகுள் பே வழங்குகிறது என்பதனால், உங்களிடம் ஒரு Gpay கணக்கு இருப்பது சிறப்பானது தானே.செய்யலாம்.

Google Pay அக்கௌன்ட் ஓபன் செய்ய என்னவெல்லாம் தேவை?

சரி, இப்போது எப்படி கூகுள் பே ஆப்ஸை டவுன்லோட் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் வங்கி விபரங்களை வைத்து, உங்களுக்கென்ற ஒரு சொந்த கூகுள் பே அக்கௌன்ட்டை உருவாக்குவது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். முக்கிய குறிப்பு: கூகுள் பே (Google Pay) சேவையை அமைக்க உங்களுக்கு Google கணக்கு அல்லது ஜிமெயில் கணக்கு இருக்க வேண்டும்.

பிறகு உங்களிடம் செயலில் உள்ள ஒரு இந்திய (+91) ஃபோன் எண் மற்றும் செயலில் உள்ள இந்திய வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6+ மேல் வெர்ஷனில் இயங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி புதிதாக ஒரு கூகுள் பே அக்கௌன்ட்டை உருவாக்குவது?

- கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Google Pay ஆப்ஸை டவுன்லோட் செய்யவும்.

- உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

- உங்கள் Google கணக்கு அல்லது ஜிமெயில் கணக்கு மூலம் உள்நுழையவும்.

- உங்கள் Google Pay பயன்பாட்டைப் பாதுகாக்க தேவைப்படும் PIN நம்பரை உள்ளிடவும்.

- வங்கிக் கணக்கு விபரங்களை உள்ளிட்டு கூகுள் பே ஆப்ஸ் உடன் சேர்க்கவும்.

- அதேபோல், உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்உ விபரங்களையும் சேர்க்கலாம்.

- உங்கள் ஃபோன் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிடவும்.

- வங்கிக் கணக்கை உறுதி செய்தவுடன்

- உங்கள் கூகுள் பே காண்டக்ட்டில் உள்ள நபர்களுக்கு பணம் அனுப்பலாம்.

- அல்லது QR ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.

இந்த முறையை பின்பற்றி கூகுள் பே கணக்கை எளிமையான நீங்கள் உருவாக்கலாம்.

No comments