Breaking News

வெறும் வயிற்றில் காபி குடித்தால் உடல் நலத்திற்கு பாதிப்பா? உண்மை என்ன? எக்ஸ்பர்ட்ஸ் சொல்வது என்ன?

 


காலையிலேயே வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதனால் இரைப்பையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மேலும் அல்சர், குமட்டல், அஜீரணம் போன்றவைகளுக்கும் இவை வழி ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உலக அளவில் பலருக்கும் பிடித்த ஒரு பானம் எது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.. காபி என்று.. அந்த அளவுக்கு பலருக்கும் காபி பிடித்த பானமாக உள்ளது. பலரும் காலையில் கண் முழித்தவுடன் தண்ணீர் கூட குடிக்காமல் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.. காஃபியில் உள்ள காஃபைன் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

டைப் 2 டயட்டீஸ்: மூளை செயல்பாட்டை தூண்டும். இதனால், காலையிலேயே பலரும் காஃபியை விரும்பி அருந்துகிறார்கள். உடல் எடையை குறைக்க காபி உதவுவதோடு டைப் 2 டயட்டீஸ், அல்சைமர், இருதய பிரச்சினைகள் உள்ளிட்டவை கூட ஏற்படாமல் காபி தடுப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்... எனினும் காலை முழித்தவுடன் காபி குடிப்பது இரப்பையில் பல்வேறு பிரச்சினைகளை தூண்டும் என்றும் நம்பப்படுகிறது.

அஜீரணத்தை ஏற்படுத்தும்: எனினும் காபி குடிப்பதால் எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகள் ஏற்படுவது இல்லை என்றும் நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. சென்சிட்டிவ் ஆன செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் காபி குடிப்பது அஜீரணத்தை ஏற்படுத்தும் அல்லது சிறிய அளவிலான அசவுகர்யத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

வெறும் வயிற்றில் காபி குடித்தால்: காபியில் உள்ள கசப்புத்தன்மை வயிற்றில் உள்ள அமிலம் சுரப்பதை தூண்டும் இதனால், எரிச்சல் போன்ற அசவுகர்யங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. அல்சர், குமட்டல், அஜீரணம் போன்றவைகளுக்கும் இவை வழி ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. வயிற்றில் வேறு எந்த உணவும் இல்லாமல் இருக்கும் சமயத்தில் காபி சாப்பிடுவது தீங்கானது என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் வயிறு சார்ந்த பிரச்சினைகளை தாண்டி சிலருக்கு நடுக்கம் ஆகியவை கூட ஏற்படக்கூடுமாம். வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன் கார்டிசோல் அதிகமாகுமாம். ஏற்கனவே மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் காபி அருந்துவது நமது உடல் நலத்திற்கு நாளைடைவில் பெரும் தீங்காக அமையக்கூடும்.

இருதய படபடப்பு, பதற்றம்: இது மட்டும் இன்றி காபியை பொறுத்தவரை நம்மை அதற்கு அடிமையாக்கும் தன்மைகொண்டது. அளவுக்கதிமாக காபி குடிப்பது கவலை, அமைதியின்மை, இருதய படபடப்பு, பதற்றம் ஆகியவற்றை அதிகரிக்கும். அதுபோக, தலைவலி, உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் சிலருக்கு ஏற்படுத்தக்கூடியது..

வறுக்கப்பட்ட காபிகள்: அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux), வயிற்று வலி அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் எந்த பயனும் இல்லை. அதேவேளையில் காபியில் பால் கலந்து குடிக்கும் போது அதன் பாதிப்புகள் ஓரளவு குறையும். அதிகமாக வறுக்கப்பட்ட காபிகளை விட மிதமாக வறுக்கப்பட்ட காபிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது கிடையாது.. எனவே.. காலையிலேயே காபி குடிப்பவர்கள் இதை முயற்சித்து பார்க்கலாம்..

No comments