ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு..!! வந்தாச்சு புதிய உத்தரவு..!! மாணவர்களே ரெடியா..?
அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான செயல்முறையை தொடங்கும்படி மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், கல்வி அமைச்சகமானது, அடுத்த கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ தயாராகும்படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2025-26ஆம் கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பதற்கான செயல்முறைகளை உருவாக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக அடுத்த மாதம்
சிபிஎஸ்இ மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் பள்ளி முதல்வர்களுடன் ஆலோசனை
நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், செமஸ்டர் திட்டத்தை
அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments