Assistant Professor: 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவகாசம் மே 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
மே 15 வரை நீட்டிப்பு
அதைத் தொடர்ந்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு மார்ச் 28 முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 29) கடைசித் தேதியாக இருந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் இது உத்தேசத் தேதி மட்டுமே.
வயது வரம்பு
உச்சபட்ச வயது வரம்பு அதிகமில்லை. 01.07.2024 அன்று 57 வயது நிறைவடையாத தேர்வர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
* குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் கூடிய முதுநிலைப் பட்டம் அவசியம். எனினும் எஸ்சி/ எஸ்டி/ எம்பிசி / டிஎன்சி / பிசி தேர்வர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.
* நெட் எனப்படும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் அல்லது ஸ்லெட் எனப்படும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம். அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் https://www.trb.tn.gov.in .
* அதில், "How to Apply" என்று கொடுக்கப்பட்டுள்ள பகுதியை கவனமாகப் படித்து அறிந்துகொள்ளவும்.
* அல்லது https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6IjdzU1czdC9ISndTUm81TWhvb3BNOGc9PSIsInZhbHVlIjoidjVZbDBGTE9LaDQ3VzRuUjZiUEYrZz09IiwibWFjIjoiOTJjNmNjMTk3ZmNmYWEzNjQ4MzFjODkyMGNkOGI3OWRlYzY5Mzk1NTZlYjE1ZjE0OGE5ZGNhODc5NWFlY2EwNSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை நேரடியாக க்ளிக் செய்துகொள்ளலாம்.
* சரியான மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரியை அளித்து முன்பதிவு செய்யவும்.
* பெயர், விண்ணப்பிக்கும் பதவி, பாடம், பிறந்த தேதி, சமூகம், முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சரியாக உள்ளிடவும்.
முழுமையான விவரங்களைப் பெற https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf .
தொலைபேசி எண்: 1800 425 6753 (Toll Free) (10:00 am - 05:45 pm)
இ - மெயில் முகவரி: trbgrievances@tn.gov.dot.in
கூடுதல் தகவல்களுக்கு: https://trb.tn.gov.in/
No comments