பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்ததற்காக வருந்தும் மாணவி - என்ன காரணம்?
உத்தரபிரதேசத்திலேயே முதல் மாணவியாக நான் வந்ததும் அந்த வீடியோ கொஞ்சம் வைரல் ஆனது. என் தோற்றம் காரணமாக அந்த வீடியோ அதிகம் பரவியது.
மக்கள் தங்கள் கருத்துகளைக் கூறத் தொடங்க, இரண்டு, மூன்று வீடியோக்கள் பிரபலமாகத் தொடங்கின. என்ன மாதிரி பொண்ணு இவள், அவள் முகத்தில் முடி இருக்கிறது என்று கூறினார்கள். ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தால் முதலிடம் பிடித்திருக்க மாட்டேன், இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டேன். ஆனால் இன்றோ அதிக கேலிக்கு உள்ளாகியுள்ளேன்.
சமூக ஊடகங்களில் என்னை முதன்முதலாக மக்கள் பார்த்திருக்காங்க. அரிதாக சில பெண்களுக்கும் இப்படி முடி இருக்கவே செய்யும். அவர்களுக்கு அது விநோதமாக தெரிஞ்சிருக்கு, அதனாலதான் இப்படி கருத்துகளைச் சொல்லியிருக்காங்க. ஹார்மோன் சமநிலையின்மையால் பொண்ணுங்களுக்கு இப்படி முடி இருக்குனு பல ஆய்வுகளில் சொல்லியிருக்காங்க. ஏற்கெனவே நான் இத்தகைய மக்களை எதிர்கொள்வதால், தற்போதைய சூழல் எந்தப் பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துனாங்க. அவங்களுக்குத் தோன்றியதை எழுதினாங்க. இதனால், வேதனை அடைந்தேன்.
தெருவில் போகும்போது, இவளுக்கு முடி இருக்குனு சொல்லுவாங்க. பொதுவாக அப்படித்தான் சொல்லுவாங்க, ஆனா, நிறையபேர் ஆதரவா இருப்பாங்க. ஆசிரியர்களும் நண்பர்களும் எனக்கு உதவியா இருப்பாங்க. அவங்களோட அதிக நேரத்தைச் செலவிடுவேன், சிலர் எதாவது சொல்லுவாங்க, ஆனா அதைப் பெரிசா எடுத்துக்கத் தேவையில்லை.
கடவுள் நம்மை எப்படிப் படைத்தாரோ, அதைஅப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். இது இப்படி, அது அப்படி என்று அவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள். அது குறித்து நாங்கள் என்ன சொல்ல முடியும்? நமது லட்சியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதில் கவனம் செலுத்த வேண்டும்.
No comments