Breaking News

ஆகஸ்ட் 1 முதல் நீங்கள் கொடுக்கும் செக் செல்லாமல் போகலாம்... இந்த ஒன்றை செய்யவில்லை என்றால்:

தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாக இருந்தாலும் காசோலை வழங்கும் பழக்கமும் ஓரளவு இருக்கிறது என்றும் காசோலை வழங்குவதற்கு சில நிபந்தனைகள் இருக்கிறது என்பதும் தெரிந்ததே.
⤵️
இந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் காசோலை பயன்படுத்துபவர்களுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் என்ற முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
⤵️
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் பாசிட்டிவ் பே சிஸ்டத்தை கடைபிடிக்க வேண்டும் என தங்களது வாடிக்கையாளர்களுக்குஅறிவுறுத்தியுள்ளதோடு, பாசிட்டிவ் பே சிஸ்டத்தை கடைபிடிக்கவில்லை என்றால் காசோலை செல்லாமல் போகும் என்றும் கூறி வருகின்றன. பாசிட்டிவ் பே சிஸ்டம் என்றால் என்ன? இது கடைபிடிக்கவில்லை என்றால் காசோலை செல்லுபடியாகாமல் போகுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
⤵️
இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள காசோலைகளுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் முறையை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றப்படாவிட்டால், அத்தகைய காசோலைகளின் அனுமதியை வங்கிகள் மறுக்க அனுமதிக்கப்படுகின்றன. பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட ஒருசில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
⤵️
பாசிட்டிவ் பே சிஸ்டம் என்றால் என்ன?
⤵️
பாசிட்டிவ் பே சிஸ்டம் என்பது பெரிய தொகைகள் கொண்ட காசோலைகளின் முக்கிய விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் செயல்முறையை உள்ளடக்கியது. இந்த செயல்முறையின் கீழ், காசோலை வழங்குபவர் மின்னணு முறையில், குறுஞ்செய்தி, மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் போன்றவற்றின் மூலம், சில குறைந்தபட்ச விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதை மின்னஞ்சல், மொபைல் பேங்கிங் ஆப் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் மின்னணு முறையில் சமர்ப்பிக்கலாம்.
⤵️
அந்த காசோலை (தேதி, பயனாளியின் பெயர்/பணம் பெறுபவரின் பெயர், தொகை போன்றவை) பெறுபவரின் வங்கிக்கு, அதன் விவரங்கள் CTS ஆல் வழங்கப்பட்ட காசோலையுடன் சரிபார்க்கப்படும். காசோலை கொடுத்த நபர் தந்த விவரங்கள் பொருந்தினால் மட்டுமே காசோலை பெற்றவரின் வங்கி கணக்கிற்கு காசோலையில் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இல்லையெனில், காசோலை செலுத்தப்படாமல் திருப்பித் தரப்படும்.
⤵️
50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகள் கொடுப்பவர்கள் பாசிட்டிவ் பே சிஸ்டம் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், அது கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் ரூ. 5,00,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் கட்டாயம் என வங்கிகள் அறிவித்துள்ளன.
⤵️
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் கட்டாய பாசிட்டிவ் பே சிஸ்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவில், ‘ஆகஸ்ட் 1 முதல் 5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் கட்டாயமாகும். பாசிட்டிவ் பே சிஸ்டம் நடைமுறை உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே காசோலையின் தொகை பரிவர்த்தனை செய்யப்படும் இல்லையே காசோலை நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
⤵️
வங்கி கணக்கு எண் காசோலை எண்காசோலை தேதிகாசோலையில் குறிப்பிட்ட தொகைபரிவர்த்தனை குறியீடுகாசோலை பெறுபவரின் பெயர்MICR குறியீடு

No comments