மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள், ஊழியர்களுக்கு 3 பெரிய பரிசுகள் கிடைக்கவுள்ளன:
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள், ஊழியர்களுக்கு 3 பெரிய பரிசுகள் கிடைக்கவுள்ளன. இதில் மிக முக்கியமானது அகவிலைப்படி பற்றியதாகும். ஏனெனில் இது மீண்டும் 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். இரண்டாவது பெரிய செய்தி அகவிலைப்படி அரியர் தொகை பற்றியதாக இருக்கக்கூடும். நிலுவைத் தொகை குறித்து அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படலாம். ஊழியர்களின் மூன்றாவது முக்கிய செய்தி அவர்களது வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) தொடர்பானது. ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வட்டி பணம் இந்த மாத இறுதிக்குள் வரலாம்.
மீண்டும் அகவிலைப்படி அதிகரிக்கும்
அகவிலைப்படியின் அதிகரிப்பு ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்தது. மே 2022 இல் ஏஐசிபிஐ குறியீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அரசாங்கம் அகவிலைப்படியை (டிஏ) 3 -க்கு பதிலாக 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்பது உறுதியானது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும். இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 27 ஆயிரத்திற்கும் மேல் உயரலாம்.
டிஏ நிலுவைத் தொகை குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு
குறிப்பிடத்தக்க வகையில், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை விவகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கு வந்துள்ளது. இது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிகிறது. முடக்கப்பட்ட அகவிலைப்படியின் அரியர் தங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 மே மாதம் 30 ஜூன் 2021 வரை நிதி அமைச்சகம் அகவிலைப்படி உயர்வை முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படலாம்.
பிஎஃப் வட்டி பணமும் கிடைக்கும்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) 7 கோடிக்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வட்டியின் வடிவில் நல்ல செய்தி வரும். இதுவரை கிடைத்த தகவலின்படி பிஎஃப் கணக்கிடப்பட்டுள்ளதால், விரைவில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்கிற்கு வட்டிப் பணம் மாற்றப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை 8.1% என்ற கணக்கில் பிஎஃப்-ன் வட்டி கணக்கில் வரும் என்று கூறப்படுகிறது.
No comments