"மெட்ராஸ் மாகாணம்" என்ற பெயர் "தமிழ்நாடு" என உருவானது எப்படி....? சில முக்கிய தகவல்கள் இதோ....!!!!
"மெட்ராஸ் மாகாணம்" என்ற பெயர் "தமிழ்நாடு" என உருவானது எப்படி? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் 1963 ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் ஸ்டேட் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநிலங்களவையில் விவாதம் நடந்தது. தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன லாபம் அடையப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. பார்லிமென்டை லோக்சபா என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் ஐ ராஜ்யசபா என்றும் மாற்றியதால் நீங்கள் என்ன லாபம் அடைந்தீர்கள்? என்று பேரினர் அண்ணா கோபமாக எதிர் கேள்வி எழுப்பி அதையே பதிலாக்கினார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இருக்கவில்லை.
அப்போது அதனுடைய பெயர் மதராஸ். இன்று நம்முடைய மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதற்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் 63 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ்க்கு இருந்தது. மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்படுவது ஏன்? என்று அன்று ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் விரும்பியது. தமிழ்நாடு என்பது நம்முடைய நாடா? அல்லது இந்தியா என்பது நம்முடைய நாடா? எப்படி இதையும் நமது நாடு அதையும் நமது நாடு என்று சொல்வது என்று முதலமைச்சர் பக்தவச்சலம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இது பிரிவினையை முன்னிறுத்திய கோரிக்கை என்று காங்கிரஸ் அச்சப்பட்டது. தமிழ் பேசாத மற்ற மொழிகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகும் என்றார்கள். இப்படி தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரிக்கையை ஆரம்பத்தில் இருந்து தவிர்த்து வந்தனர். ஆனால் நிர்வாக வசதிக்கான பிரிட்டிஷ் காரர்கள் தங்களுடைய ஆதிக்கத்திற்கு ஏற்ப மதராஸ் மாகாணம் என்று ஒரு பகுதியை அழைத்ததாலேயே அதை அப்படியே தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
நம்முடைய அடையாளங்களை காக்க வேண்டியது முக்கியம் தமிழ்நாடு என பெயர் மாற்றியே தீர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. மாநிலங்கள் அனைத்திலும் மொழி அடிப்படையிலான மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் 1948 ஆம் வருடம் ஜூன் மாதம் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்து சாதக பாதகங்களை ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநிலம் அவசியம் இல்லை நிர்வாக வசதிக்கேற்பதான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்தது.
இதையே அந்த காலத்தில் உள்ள தேச தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர். இதனையடுத்து சுதந்திரத்திற்கு பிறகு 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்த பகுதியானது, தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டும் மதராஸ் ஸ்டேட் ஆனது. 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ஒரு அறிக்கையை பெரியார் வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பிறகும் கூட தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் இருக்கக் கூடாது என்று சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்.
அந்தப் பெயரை மறைத்து சென்னை நாடு என்ற பெயர் சூட்டவும் போகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விடக்கூடாது என்று எழுதினார். இதற்குப் பிறகு திராவிட கழகம் மட்டுமல்லாது திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தது. மேலும் சங்கரலிங்கனார் என்பவர் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
இதனால் போராட்டம் உச்சமடைந்ததால் இறுதியாக 1969 தை 14ஆம் தேதி தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1938 சென்னையில் கடற்கரையில் நடைபெற்ற மாநாட்டில் மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கத்தை எழுப்பினார்கள். பிறகு பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் ஜீவானந்தம் போன்றவரும் போராட்டத்தை முன்நின்று வழி நடத்திச் சென்றனர்.
மதராஸ் மாநிலம் என்று இருந்த நம்முடைய தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பொருத்தமான மொழி சார்ந்த பெயரை சூட்டியவர் பேரறிஞர் அண்ணா ஆவார். இந்த பெயர் மாற்றம் விழாவானது 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் அண்ணா முதல்வரான பின் "மெட்ராஸ் மாகாணம்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளான (1968 ஜூலை 18) இன்று, "தமிழ்நாடு நாள்" விழாவாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று விழா நடைபெறவுள்ளது. விழாவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பல்துறை ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
No comments