Breaking News

சூப்பர் மூன் என்றால் என்ன....? எதனால் ஏற்படுகிறது....? இது குறித்த அறிவியல் தகவல்கள் இதோ....!!!!

நிலா என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும், இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384,403 கி.மீ. ஆகும். ஈர்ப்பு விசை பூட்டல் காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது. இந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன.

புவியின் வான்பரப்பில் அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில் (கதிரவனை அடுத்து) இரண்டாவது வெளிச்சமான வான்பொருள் நிலவாகும்.

இது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது. இது நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் 2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்  நேற்று இரவு வானில் தோன்றியது.

நாசா கூற்றுப்படி இந்த நிகழ்வு 3 நாட்கள் நீடிக்கும். பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை நிலவு வரும்போது சூப்பர் நிலவு தோன்றும். இது வழக்கத்தை விட 17% அளவில் பெரிதாகவும். 30% ஒளி அதிகமாகவும் இருக்கும். இந்த பெரிய நிலவிற்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது தண்டர் மூன்/ஹே/மெட் மூன் என்று பெயரிட்டுள்ளனர்.

பௌர்ணமி அன்று நிலவு பூமியை சற்று நெருக்கமாக வருவதால் இப்படி பெரிய நிலவாக, பிரகாசமாக தோன்றும் என்று கூறப்படுகிறது.  இந்த நிகழ்வின்போது நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண நாட்களை விட நிலவும், வானமும் மிகவும் பிரகாசமாக தெரியும். இந்த நிகழ்வை உலகின் எல்லா பகுதிகளிலும் தெரியும்.

இப்படி வானில் தோன்றும் இந்த சூப்பர் மூன் என்பது என்ன? எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நிலா அதனுடைய சுற்றுப் பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அப்போது சுற்றிப் பாதையில் நிலவு பூமிக்கு மிகப் பக்கத்தில் இருக்கும், அதே நேரத்தில் முழு நிலவாக இருக்கும்போது சூப்பர் மூன் அல்லது இரத்த நிலவு ஏற்படுகிறது. அதாவது நிலா பூமியை நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது.

எனவே ஒரு புள்ளியில் நிலா பூமிக்கு மிக அருகிலும், இன்னொரு புள்ளியில் தொலைவாகவும் சென்று வரும். நீள்வட்ட பாதையில் மிகத் தொலைதூரத்தில் உள்ள புள்ளி அப்போஜு என்றும், மிக பக்கத்தில் உள்ள புள்ளி பெரிஜீ என்றும் அழைக்கப்படுகிறது. தொலைதூரப் புள்ளியானது பூமியிலிருந்து சராசரியாக 405,500 கிலோமீட்டர் தொலைவிலும், மிக பக்கத்தில் உள்ள புள்ளியானது கிட்டத்தட்ட 363,300 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதன் காரணமாக முழு நிலவானது பூமிக்கு மிகப் பக்கத்தில் உள்ள பெரிஜீ புள்ளியில் தோன்றும் போது வழக்கத்தை விட சற்று பிரகாசமாகவும், முழு நிலவை விட பெரிதாகவும் காட்சி அளிக்கும். இதுதான் சூப்பர் மூன் அல்லது ரத்த நிலவு என்று அழைக்கப்படுகிறது. இந்த சூப்பர் மூன் ஆனது ஒரு வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை காட்சி அளிக்கும். இதனை பார்வையின் மூலமாக வேறுபடுத்தி பார்ப்பது என்பது கடினமானது.

ஆனால் அது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வால் கடல், பெருங்கடல்களில் சில இடங்களில் அதிக அளவில் அலைகள் மேலே எழும்பும். இவ்வாறு கடல் கொந்தளிப்பால் கடலோர கிராமத்தில் தண்ணீர் உள்ளே புக வாய்ப்பு உள்ளது. மிக நெருக்கமான புள்ளியில் நிலவு காட்சியளிக்கும் போது அந்த வருடத்தின் மங்கலான நிலவை விட 17 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுகிறது.

இந்த சூப்பர் மூன் ஆனது இவ்வளவு பிரகாசமாகவும், பெரிதாகவும் காட்சியளிப்பதால் உண்மையில் இது சராசரி நிலவை காட்டிலும் எவ்வளவு பெரியது என்று பார்த்தால் 14 சதவீதம் தான் பெரியதாக தோன்றும். அதேபோல அப்போஜியில் உள்ள நிலவை காட்டிலும் 30 சதவீதம் மட்டுமே பிரகாசமாக தோன்றும். அதேபோல முழு நிலவின் சராசரியை காட்டிலும் சூப்பர் முள் ஏழு சதவீதம் மட்டுமே பெரியதாகவும், 15 சதவீதம் மட்டுமே பிரகாசமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments