IMPORTANT HEALTH TIPS-இதை தினமும் செய்தால் சர்க்கரை வியாதியை தூரமாக விரட்டலாம்!முழுமையாக படியிங்கள் பயன்பெறுங்கள்:
பொதுவாக மற்ற உடற்பயிற்சிகளை காட்டிலும் நடைப்பயிற்சி உடலுக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது, எட்டு வடிவில் நடப்பது, வேகமாக நடப்பது போன்ற பல வகைகள் நடைப்பயிற்சி செய்வதில் உள்ளது.
சமீபத்திய ஆய்வின்படி, தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது ரத்த சர்க்கரை நோயால் ஏற்படும் மரண அபாயத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 1700 ப்ரீடயாபெடிக்ஸ் மற்றும் டயாபெடிக்ஸ் நபர்களிடம் இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தத்தில், 1,194 பேர் ப்ரீடயாபெடிக்ஸ் கொண்டவர்கள், 493 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது. நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களுக்கு ஃபாஸ்டிங் இரத்த குளுக்கோஸ் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 126 மில்லிகிராம் (mg/dL) அதிகமாக இருந்தது.
ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கான ஆய்வில் 100 முதல் 125 mg/dL வரை ஃபாஸ்டிங் குளுக்கோஸ் அளவைக் கொண்டிருந்தனர். ப்ரீடயாபெடிக்ஸ் உள்ளவர்களால் தினசரி 8,500 ஸ்டெப்ஸ்கள் நடந்தனர். நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு சுமார் 6,300 ஸ்டெப்ஸ்கள் நடந்தனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை தொடர்ந்து 7 நாட்களுக்கு அவர்களது ஸ்டெப்ஸ்களை கணக்கிடும் வகையில் அவர்களது இடுப்பில் ஆக்சலேரோமீட்டரை அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அந்த நபர்களின் வயது, பாலினம், இனம், புகைபிடித்தல், மது அருந்துதல், உணவு முறை மற்றும் நீரிழிவு மருந்துகளின் பயன்பாடு ஆகியவற்றை ஆய்வாளர்கள் சரிபார்த்துக்கொண்டனர். கடந்த 9 ஆண்டுகளில், 200 ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் 138 நீரிழிவு நோயாளிகள் இறந்துள்ளனர்.
ஆனால் தற்போது பின்பற்றப்பட நடைமுறை மூலம் அதாவது தினமும் கிட்டத்தட்ட 10,000 ஸ்டெப்ஸ்கள் நடந்த ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மரண அபாயம் எதுவும் வராமல் அவர்கள் ஆரோக்கியமாக காணப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் முழுவதுமாக ஈடுபடாதவர்களை ஆய்வாளர்கள் அவர்களை இந்த செயல்முறையிலிருந்து நீக்கிவிட்டனர். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது என்பது உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக தோன்றினால் உங்களது குடும்ப மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை பெற்று உங்கள் உடலுக்கு ஏற்ற வகையில் போதுமான பயிற்சியை தினசரி மேற்கொண்டால் நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
No comments