Important Health Tips Healthy Oils: விளக்கெண்ணெயை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது தெரியுமா?
வீட்டு வைத்தியத்தில் விளக்கெண்ணெய்: ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய் மலமிளக்கியாக செயல்படுவதாக பரவலான நம்பிக்கை இருக்கிறது.
விளக்கெண்ணெயின் பயன்கள் பல்வேறு வகையில் இருந்தாலும், அதை வாய்வழியாக எடுத்துக் கொள்வது சரியானதா என்ற கேள்விலும் பலருக்கு இருக்கிறது.
மலச்சிக்கல், கீல்வாதம், சருமப் பிரச்சனைகள் மற்றும் பிரசவத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும் அருமருந்து என பல்வேறு ஆக்கப்பூர்வமான பயனைக் கொண்டுள்ளது விளக்கெண்ணெய்.
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் விளக்கெண்ணெய் மலச்சிக்கலைப் போக்க இயற்கையான மருந்து என்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை உட்கொள்வது பாதுகாப்பானதா? என்ற கேள்விக்கு இரு வேறு பதில்கள் கிடைக்கின்றன.
விளக்கெண்ணெய் பயன்பாடு, அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல என்றும், சிலர் இதை தவிர்க்க வேண்டும் எனறும் அறிவுறுத்துகின்றனர். ஆமணக்கு எண்ணெய் மலச்சிக்கலைப் போக்குவதில் பயனுள்ளதாகவும், விரைவாக வேலை செய்வதாகவும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ஆனால் விளக்கெண்ணெயை வாய்வழியாக எடுத்துக் கொள்வதற்கு அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சில உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
மலச்சிக்கலைப் போக்க விளக்கெண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது என்றும், அதற்கு ஏதாவது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையா என்பதையும் தெரிந்துக் கொள்ளவும்.
விளக்கெண்ணெய் மற்றும் அதன் நன்மைகள்
ஆமணக்கு கொட்டைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. விதைகளின்
வெளிப்புற உறையில் ரிசின் என்ற கொடிய விஷம் உள்ளது. எனவே, ஆமணக்கு விதைகள்
மட்டுமே எண்ணெய் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், கர்ப்ப காலத்தில் பிரசவத்திற்குகம், குழந்தைக்கு தாய்பாலுடன் விளக்கெண்ணெயை கலந்து (பேச்சு வழக்கில் உங்கெண்ணெய் என்று சொல்வார்கள்) குழந்தைக்கு புகட்டுவார்கள்.
சிலர் ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் வலியைக் குறைக்கவும் மற்றும் கண்களில் எரிச்சலைத் தணிக்கவும் உடலில் விளக்கெண்ணெயை தடவுவது சகஜமானது.
மலச்சிக்கலுக்கு ஆமணக்கு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?
விளக்கெண்ணெயை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கலைக் குறைப்பதற்கான தூண்டுதலை கொடுத்து, மலமிளக்கியாக செயபடுவதாக விளக்கெண்ணெய் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆமணக்கு எண்ணெயில் காணப்படும் முதன்மை கொழுப்பு அமிலமான ரிசினோலிக் அமிலம், குடல் சுவர்களின் தசைகளை சுருக்கி மலத்தை வெளியேற்றுகிறது. ஆமணக்கு எண்ணெய் கருப்பையில் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தும், அதனால்தான் இது பிரசவத்தைத் தூண்டவும் பயன்படுத்தப்படுகிறது.
விளக்கெண்ணெய் மிகவும் துரிதமாக வேலை செய்கிறது. குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு 1-15 மில்லி என்ற அளவை விட அதிகமாக கொடுக்கக்கூடாது.
விளக்கெண்ணெயின் சுவை பொதுவாக யாருக்கும் பிடிக்காது. இதை குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பிறகு, ஒரு கிளாஸ் பழச்சாறுடன் சேர்த்துக் குடிக்கவும். சுவையான ஆமணக்கு எண்ணெய் தயாரிப்புகளும் சந்தையில் கிடைக்கின்றன. விளக்கெண்ணெயை பயன்படுத்திய இரண்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் அதன் விளைவுகள் தெரியவரும்.
விளக்கெண்ணெய் பயன்பாடு பாதுகாப்பானது என்றாலும் நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வதோ அல்லது அதிக அளவுகளில் எடுத்துக்கொள்ளவதோ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஒரு வாரத்திற்கு மேல் அல்லது ஒரு நாளைக்கு 15-60 மில்லிக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தினால், உடலில் நீர் இழப்பு மற்றும் பொட்டாசியம் இழப்பு ஏற்படலாம். இது நாள்பட்ட மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. கர்ப்பிணிப் பெண்களும் விளக்கெண்ணெய் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது கருப்பை சுருங்குவதற்கும், பிரசவம் விரைவில் நடைபெறுவதற்கும் வழிவகுக்கும்.
No comments