Breaking News

மாணவர்கள் சார்ந்த அறிவியல் படைப்பு -உங்கள் மாணவர்களுக்கும் இதனை FORWARD செய்யலாமே ! நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றது?..... நட்சத்திரங்கள் உருவாகுமிடம்..... பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா....!!!!!

இந்த உலகத்தில் நாம் ஒரு பொருளை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக தேவைப்படுவது ஒளி. நமக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் ஒளி என்பது இன்றியமையாதது. பொதுவாக ஒளி நமக்கு எப்படி கிடைக்கின்றது என்பதை பற்றி பார்த்தால் சூரியனிடம் இருந்து கிடைக்கின்றது. சூரியன் ஒரு விதமான நட்சத்திரம். அதுவே இரவு நேரத்தில் இருளாக இருக்கும் போது வானில் நட்சத்திரங்கள் மின்னுவதை நாம் பார்த்திருப்போம். சூரியனை விட இந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் சூரியனை விட மிகப்பெரிய அளவில் இருக்கும். அப்படி இருக்கும் போது சூரியனிலிருந்து வரும் ஒளி மட்டும்எப்படி பிரகாசமாக உள்ளது.

நட்சத்திரங்களில் இருந்து வரும் வெளிச்சம் குறைவான அளவில் தெரிகின்றது.

அது ஏன் என்று கேட்டால் சூரியன் நமது பூமிக்கு மிக மிக அருகில் உள்ள ஒரு நட்சத்திரம். இதுக்கும் நமக்கும் இடையே உள்ள தொலைவு மிகக் குறைவு. ஆனால் நட்சத்திரங்கள் பூமியிலிருந்து பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த ஒளி ஆண்டுகள் என்றால் ஒளி ஒரு நொடிக்கு 30 கோடி மீட்டர் பயணம் செய்யும். இதே வேகத்தில் இந்த ஒளி ஒரே வருடத்திற்கு பயணம் செய்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ அந்த அளவு தூரத்தை தான் ஒரு ஒளியாண்டு என்று கூறுகிறோம். அதுவே அறிவியல் அறிஞர்களின் கணக்குப்படி இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் பூமியிலிருந்து பல மில்லியன் ஒளியாண்டு இருந்து ட்ரில்லியன் ஒளியாண்டு தொலைவு வரை இருக்கும் என்று கணித்துள்ளனர்.

அதாவது இந்த ஒளி அனைத்தும் நமது பூமிக்கு வந்து சேர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சூரியனிலிருந்து நமது பூமிக்கு ஒளி வருவதற்கு சராசரியாக எட்டு நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். நட்சத்திரங்கள் மின்னுவதை நாம் பார்த்திருப்போம். உண்மையாகவே நட்சத்திரங்கள் மின்னுகிறதா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. இந்த நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி நம்முடைய வளிமண்டலத்தில் பட்டு தான் ஊடுருவி பூமியை அடைகின்றது. இப்படி வளிமண்டத்தில் உள்ள ஏர் என்கின்ற இந்த மீடியம் வழியாக தான் வருகின்றது . இந்த காற்று பகுதியை ஒரு நிலையாக இல்லாமல் பல இடங்களில் அலைபாயுவதால் இதன் மூலமாக ஊடுருவும் இந்த ஒளி பூமியை வந்து அடையும்போது அன்ஸ்டேபிளாக நிலையற்ற தன்மையுடன் இருக்கும்.

அதனால் தான் நட்சத்திரங்கள் அனைத்தும் நாம் பார்க்கும் போது மின்னி மின்னி அணைவது போல் தெரியும். ஆனால் உண்மையாக அது மின்னி மின்னி அணைவது கிடையாது. நமது வளிமண்டலத்தில் உள்ள காற்றின் நிலையற்ற தன்மையினால் தான் இப்படி தோன்றுகிறது. நட்சத்திரம் என்பது ஹீலியம், ஹைட்ரஜன் போன்ற காற்றுகளை உள்ளடக்கிய வெப்பம். பந்து போன்ற வடிவம் தான் இந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரம் எப்படி உருவாகிறது என்றால் பொதுவாக விண்வெளியில் உள்ள தூசுகள் அனைத்தும் வேகமாக சூழ்ந்து ஒன்றோடு ஒன்று உராயும்போது இந்த ஹைட்ரஜன் ஹீலியம் கேஸ் உள்ளே இருக்கும் மாசுக்கள் அனைத்தும் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு ஒன்றோடு ஒன்று பிணைந்து கொள்கின்றது.

இப்படி பிணையும் போது இது ஒரு பந்து போன்ற உருவத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு பொதுவாக ஒரு பேப்பரை நாம் கசக்கும் போது அது பந்து போன்ற உருவம் எடுப்பதை போல் தான் இது ஒன்றோடு ஒன்று பிணையும் போது இவை அனைத்தும் சேர்ந்து பந்து போன்ற உருவத்தை எடுக்கிறது. பொதுவாக நமது விண்வெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மற்றும் மில்லியன் கணக்கான கேலக்ஸி உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த ஒவ்வொரு கேலக்ஸியிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஒரு நட்சத்திரம் எப்படி உருவாகிறது என்பதை பற்றி தற்போது பார்ப்போம். பொதுவாக விண்வெளியில் உள்ள தூசுகள் அனைத்தும் புகை மண்டலமாக சூழ்ந்து ஒன்றோடு ஒன்று உராயும் போது அதில் இருக்கும் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் போன்ற கேஸ்களில் இருக்கும் ஆர்டிகள் அனைத்தும் அதனுடைய ஓன் கிராவிட்டேஷனல் பார்க் காரணமாக ஈர்க்கப்பட்டு ஒன்றோடு ஒன்று இணைந்து பிணைந்து ஒரு கோள வடிவமாக உருவாகின்றது. இவை ஒன்றோடு ஒன்று உராயும்போது ஏற்படுகின்ற நிகழ்வு காரணமாக வெப்பம் அதிகளவு உருவாகின்றது.

இப்படி உருவெடுக்கும் போது இதன் மையப் பகுதியில் அதிக அளவு வெப்பம் இருக்கும்.

இதுதான் ஒரு நட்சத்திரம் உருவாகுவதற்கு ஆரம்ப நிலை. இந்த நிலையில் அந்த நட்சத்திரத்தின் வெப்பமானது ஒரு மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த ஒரு மில்லியன் டிகிரி செல்சியஸை தொட்ட பிறகு நியூக்ளியர் ஃப்யூஷன் காரணமாக இந்த நட்சத்திரத்தின் எரிபொருள் பிரிய ஆரம்பித்து விடும். இப்பொழுதுதான் இது முழு நட்சத்திரமாக உருவெடுக்கும். இந்த நியூக்ளியர் ஃப்யூஷன் செயல்பாட்டின் போது ஹைட்ரஜன் அனைத்தும் எரிந்து ஹீலியம் கேஸ் மட்டும் உருவாக்குகின்றது. இந்த ஹீலியம் கேஸ் தான் நட்சத்திரம் ஒளிர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

இப்படி உருவாகும் நட்சத்திரங்களை அறிய புகைப்படங்களாக நாசா எடுத்து வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா ஐரோப்பியா மற்றும் கன்னட விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியது. ஜேம்ஸ் வெப் என்ற பெயரில் இந்த தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்சு பைனாவில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டது. மொத்தம் ஐந்து ராக்கெட் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது .இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிவரும் புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் கரீனா நிபுலா என்ற பிரபஞ்சத்தில் மலைமுகடு போன்ற பகுதிகளில் நட்சத்திரங்கள் ஒளிரும் நிகழ்வை புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது. கரீனா நிபுலாவின் என்.ஜி.சி. 3324 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் நட்சத்திரங்கள் உருவாகுகிறது என நாசா விஞ்ஞானிகள் தெரிகின்றனர். இந்த பகுதியில் சிறிய முதல் பெரிய நட்சத்திரங்கள் ஒளிர்வதை தொலைநோக்கி மூலமாக படம் எடுக்கப்பட்டுள்ளது. கரீனா நிபுலா பிரபஞ்சம் வாயு துகள்கள் நிரம்பியதாகவும், மலை முகடு போன்ற பகுதிகளில் இருந்து இந்த தூசுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நட்சத்திரங்களாக உருவாவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் பிரபஞ்சத்தின் பல்வேறு மர்மங்களை கலைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

No comments