மக்களே உஷார்..!! இந்தியாவில் வேகமெடுக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்..!!
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கன மழை கொட்டி வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
பல பகுதிகளில் தீவு போல் காட்சி அளிக்கிறது. பெருமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 190க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது போதாதென்று ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரசின் பாதிப்புகளும் அங்கு பெருகி வருகிறது.
இத்தொற்று
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு எளிதில் பரவக்கூடிய தன்மை கொண்டதாகும்.
இந்நோய்க்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை மொத்தம் 23 பேர்
உயிரிழந்துள்ள அதிர்ச்சி செய்தியும் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த
செய்தியை தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் மோரிகாவன் மற்றும் நல்பாரி ஆகிய மழை
வெள்ளம் சூழ்ந்த 2 மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேர்
உயிரிழந்து உள்ளனர்.மேலும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு 16 பேருக்கு
உறுதி செய்யப்பட்டு உள்ளது. அசாமில் இதுவரை 160 பேருக்கு இதன் பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளத்தின் இடர்பாடுகளால்
மக்கள் அவதியுற்று வரும் வேளையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பும்
மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அரசு விரைவில் துரித நடவடிக்கை எடுக்க
வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
No comments