Breaking News

76 மதிப்பெண் பெற்றவருக்கு 6 வழங்கி அலட்சியம்! பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் கூட்டல் பிழை:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தத்தில், அதிக அளவுக்கு கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த கல்வி ஆண்டில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தப்பட்டன.

இதையடுத்து, விடைத்தாள் திருத்தமும் முடிக்கப்பட்டு, ஜூன் 20ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இந்த முறை பிளஸ் 2 தேர்வில், நன்றாக தயாராகி தேர்வு எழுதியும், சரியான மதிப்பெண் கிடைக்காததால், பல மாணவர்கள் சந்தேகம் அடைந்தனர். விடைத்தாள் நகல் கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.அவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் வழங்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.பலரின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டபோதும், மதிப்பெண்களை சரியான முறையில் கூட்டி பதிவிடாதது தெரியவந்துள்ளது.

சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தத்தில், அதிக அளவுக்கு கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments