ஆடி முதல் நாள்: கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்!
ஆடி முதல் நாள்: கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்!
ஆடி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறக்கின்றது.
ஆடி ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் மிக மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது. ஆதாவது, ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இந்த நாளிலேயே ஆடி மாதம் பிறப்பதால் இந்த நாளில் நமது வீட்டில் அம்மனை வரவழைத்து எப்படி வழிபாடு செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆடி மாதம் வந்து விட்டாலே அம்மனுக்கு மிக மிக உகந்த நாள். இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனை தரும். இருந்தாலும், ஆடி மாதம் பிறந்த உடன் அருகிலிருக்கும் காவல் தெய்வமான அம்மனை, ஆடி மாதம் முதல் தேதி கட்டாயமாக சென்று தரிசனம் செய்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். சில ஊர்களில் அம்மன் காவல் தெய்வமாக ஊர் எல்லையில் இருக்கும். சில இடங்களில் தெருமுனையிலேயே அம்மன் கோவில் இருக்கும். இப்படி உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய, நீங்கள் வசிக்கக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய அம்பாளை கட்டாயமாக தரிசனம் செய்ய வேண்டும்.
உங்கள் சொந்த ஊரில் இருக்கக்கூடிய அம்பாளை சென்று தரிசனம் செய்யலாம் தவறு கிடையாது. உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்யலாம் தவறு கிடையாது. உங்களுடைய குலதெய்வம் அம்பாள் இல்லாமல், வேறு ஏதாவது தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வங்களை ஆடி மாதம் சென்று தரிசனம் செய்யலாம். இருப்பினும் இந்த வழிபாட்டிற்கு எல்லாம் முன்பாக, நிச்சயமாக உங்கள் ஊரில் இருக்கும் அம்பாள் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்வது நல்லது.
ஏனென்றால் உங்களுடனே இருந்து உங்களை பாதுகாக்க கூடிய தெய்வம் நீங்கள் தற்சமயம் வசிக்கக்கூடிய ஊரில் இருக்கக்கூடிய அம்பாள் என்பதை மறக்கக்கூடாது. மறக்காதீங்க, நாளை உங்க வீட்டு பக்கத்துல இருக்கிற அம்மன் கோவிலுக்கு கட்டாயம் சென்று அம்பாளை மனமார தரிசனம் செய்யுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய கோவிலில் திருவிழா, கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி என்றால் கட்டாயமாக அதில் நீங்கள் பங்கு கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
எப்படி கலசம் வைத்து அம்மனை வீட்டிற்குள் அழைப்பது?
நாளை ஞாயிற்றுக்கிழமை ஆடி 1 பிறக்க இருப்பதால் இன்றைய தினமே உங்கள் வீடு, பூஜை அறை, எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை சுவாமி படங்களை எல்லாம் கூட துடைத்து எல்லா வேலையையும் இன்றே முடித்து விடுங்கள். நாளைய தினம் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு குறிப்பாக மஞ்சள் பூசி குளித்துவிட்டு, மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு, அம்மன் வழிபாடு செய்ய வேண்டும். பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி படங்களுக்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து பூஜைக்கு தயார் செய்துவிட வேண்டும்.
கலசம் நிறுத்துவதாக இருந்தால் ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சொம்பில் சுத்தமான நல்ல தண்ணீரை நிரப்பி சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து சிறிதளவு பன்னீர் ஊற்றி ஒரு கைப்பிடி வேப்பிலை போட்டு ஒரு எலுமிச்சம் பழத்தை அந்த தண்ணீரில் போட்டு மேலே மாயிலை வைத்து தேங்காய் வைப்பதாக இருந்தால் வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் கலசத்திற்கு மேலே ஒரு பூ வைத்தாலும் போதும். அவ்வளவுதான் நமக்கு தேவையான கலசம் தயார்.
ஒரு வாழை இலையில் பச்சரிசியை பரப்பி தயார் செய்த கலசத்தை அந்த பச்சரிசியின் மேல் வைத்து ஓம் சக்தி! ஓம் சக்தி! என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அம்பாளை அந்த கலசத்தில் ஆவாகனம் செய்து, சர்க்கரை பொங்கலை நெய்வேதியமாக வைத்து தீப தூப ஆராதனை காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த கலச சொம்பை மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்து தினமும் அம்பாளுக்கு நிவேதனம் வைத்து, மூன்றாவது நாள் கலச செம்பில் இருக்கும் தண்ணீரை எடுத்து செடி கொடிகளுக்கு ஊற்றிவிட்டு, எலுமிச்சம் பழத்தை கால் படாத இடத்தில் போட்டு விடலாம். மற்றபடி அதில் இருக்கும் வேப்ப இலை, மா இலை பூக்கள் எல்லாவற்றையும் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். பச்சரிசியை எடுத்து சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு கலசம் வைத்து வழிபடக்கூடிய வழக்கம் கிடையாது என்பவர்கள், கலசம் நிறுத்தாமலும் உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாலின் திருவுருவப்படத்தை முன்வைத்து அதற்கு தனியாக ஒரு தீபம் ஏற்றி 108 முறை அம்பாளின் பெயரை உச்சரித்து அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கலை பிரசாதமாக வைத்தும் அம்பாளை உங்கள் வீட்டிற்குள் அழைக்கலாம். தவறு கிடையாது.
சுலபமாக வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை பின்பற்றிக் கொள்ளுங்கள். எளிமையான முறையில் சுத்தபத்தமாக உண்மையான மனதோடு அம்பாளை வேண்டி விரும்பி வீட்டுக்குள் அழைத்தால் சந்தோஷமாக அந்த சக்தி தேவி உங்கள் வீட்டிற்குள் குடி வந்து அருள் பாலிபால்.
No comments