இந்த தேர்வு எழுதியவர்களுக்கு நேர்காணல் எதுவும் கிடையாது... ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்..!!
அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
அத்துடன், தேர்வர்கள் போட்டி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாகவும், நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என தேர்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் வேறுவிதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2017-18-ம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1,060 இடங்களுக்கு நேரடி நியமனம், பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வர்கள் போட்டி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது.
இதன் மூலம் நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என தேர்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் வேறுவிதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments