Breaking News

இனிய வணக்கம் உறவுகளே..! இன்றைய நலத்தகவல்..! நாளும் நெல்லிக்காய் சாறு அருந்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:


இனிய வணக்கம் உறவுகளே..!

இன்றைய நலத்தகவல்..!

நாளும் நெல்லிக்காய் சாறு அருந்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?


நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:

நீர்=82%

புரதம்=0.5%

கொழுப்பு=0.1%

மாவுப்பொருள்=14%

நார்ச்சத்து=3.5%

கால்சியம்=50 யூனிட்

பாஸ்பரஸ்=20 யூனிட்

இரும்பு=1.2 யூனிட்

வைட்டமின் C=600 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.


மருத்துவக் குணங்கள்:

பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும்.
அருமையான கண் பார்வை தரும்.

பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.

மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும்.

பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.

குறிப்பு: நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு

ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது.

பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது.

அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

இனிய மகிழ்வான நன்றி உறவுகளே..

No comments