இந்த மருத்துவ குறிப்பு நம் அனைவருக்கும் உகந்த குறிப்பாகவும்.இதனை கண்டிப்பாக படிக்கலாமே ! எதற்கு எடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரை எடுப்பது நல்லதா? - மருத்துவர் தரும் விளக்கம்
பாராசிட்டமால் என்கிற மருந்தியல் பெயர் நமக்கு மிகவும் பரிச்சயமானது. சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது.
தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது.
இந்த கொரோனா காலத்தில் பாராசிட்டமாலின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கீழே விழுந்து அடிபட்ட காயத்துக்குக்கூட மருத்துவர்களால் பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. பாராசிட்டமால் மாத்திரை, சர்வரோக நிவாரணியா? மருத்துவர் பரிந்துரையின்றி பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது சரியா... எனப் பொது மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம்.
மருத்துவர் புகழேந்தி``காய்ச்சல் மற்றும் தலைவலிக்குதான் முக்கியமாக பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படும். காய்ச்சல் வந்த உடனேயே பாராசிட்டமால் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. உடலின் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டிவிட்டால் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், காய்ச்சல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அதை உடனே குணப்படுத்த முனைவது நல்லதல்ல.
தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், காய்ச்சல் வந்தால் வலிப்பு வருகிறவர்கள், கர்ப்பிணிகள் வேண்டுமானால் ஆரம்பத்திலேயே பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் 100 டிகிரியைத் தாண்டிவிட்டால் இவர்கள் பெரும் விளைவைச் சந்திக்க நேரிடும். மற்றவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு காய்ச்சலோடு இருப்பதும் நல்லதுதான்.
கீழே விழுந்து அடிபடுகிறவர்களுக்கு பாராசிட்டமால் இரண்டு விதங்களில் கொடுக்கப்படும். வயிறு தொடர்பான பிரச்னைகள், செரிமானக்கோளாறு உள்ளவர்களுக்கு வலிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக பாராசிட்டமால் கொடுக்கப்படும்.
தலைவலிபாராசிட்டமால் மாத்திரைகளை தர மறுக்கின்றனவா மருந்துக்கடைகள்; காரணம் என்ன?டைக்ளோபீனக் போன்ற வலிக்கொல்லி மாத்திரைகள் வயிற்றுப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் அதை நிகர் செய்வதற்காக அம்மாத்திரைகளுடன் பாராசிட்டமால் மாத்திரையும் சேர்த்துக் கொடுக்கப்படும். இது போன்று பல பிரச்னைகளுக்கு வழங்கப்படுவதால் பாராசிட்டமால் அனைவருக்கும் பரிச்சயப்பட்ட பெயராக இருக்கிறதே தவிர, அது சர்வரோக நிவாரணியெல்லாம் இல்லை.
லேசான தலைவலி வந்தால்கூட உடனே பாராசிட்டமால் மாத்திரை வாங்கிச் சாப்பிடுகிறோம். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் உடனடியாக அவருக்கு மருந்து கொடுப்பதே அக்கறை என்று நாம் நினைத்திருக்கிறோம்.
தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பல பிரச்னைகளின் அறிகுறியாகத் தலைவலி ஏற்படலாம். எனவே, தலைவலியை பொதுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதை ஆராய்வதற்கும், எந்த அளவு வரைக்கும் அதைத் தாங்கலாம் என்றும் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் நாம் சுய மருத்துவம் செய்துகொள்கிறோம்.
அமெரிக்காவில், மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே பாராசிட்டமால் விற்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரைகளை விற்கக் கூடாது என்பதுதான் விதி. ஆனால், அந்த விதிமுறையை மீறி சர்வ சாதாரணமாகப் பல மாத்திரைகள் இங்கே விற்கப்படுகின்றன.
காய்ச்சல்Doctor Vikatan: கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது ஏன்?மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. பாராசிட்டமால் உட்கொள்வதற்கு ஓர் அளவு இருக்கிறது. மருத்துவர்களே உடலை ஆராய்ந்து எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கூறுவர். பாராசிட்ட மாலை அளவுக்கதிகமாக உட்கொள்வதன் விளைவாக கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன" என்றவர், பாராசிட்டமால் விலையேற்றம் குறித்தும் பேசினார்.
``பாராசிட்டமாலின் மூலப்பொருளை 70 - 80 சதவிகிதம் நாம் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். கொரோனா காரணமாக, பாராசிட்டமாலின் தேவை அதிகரித்ததன் விளைவாக அதன் விலை தாறுமாறாக ஏறியிருக்கிறது. மருந்தகங்களுக்கு 1,000 மாத்திரைகள் 250 - 300 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வந்தது தற்போது 600 - 700 ரூபாய் ஆகியிருக்கிறது. தேவைக்கும் அதிகமான பாராசிட்டமால் நுகர்வின் விளைவாகவே, இதைப் பார்க்க முடியும்" என்றார் புகழேந்தி.
No comments