Breaking News

இயற்கையான மருந்தாக இருந்து செரிமானத்தை சீராக்கும் விளக்கெண்ணெய் !!

விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் என்பது ஆமணக்கு என்னும் தாவரத்தின் விதைகளிளிருந்து தயாரிக்கப் படுகிறது.

ஆமணக்கு எண்ணெய் வெப்பத்தை உருவாக்கி செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. மற்றும் சரியான குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலம் செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது.

மூட்டு வலிகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவத்தில் பழங்காலத்திலிருந்தே ஆமணக்கு எண்ணெய் கீல்வாதம் வலி, வீக்கம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்யில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது மசாஜ் செய்வதற்கு சிறந்ததாக உள்ளது. எனவே இது தசைகள் மற்றும் மூட்டுகளில் பயன்படுத்தப் படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் ஆமணக்கு எண்ணெய் மற்றும் சூடான தண்ணீர் பேக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு முறை ஆமணக்கு எண்ணெய்யைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலைமுடி வேகமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்களுக்குச் சென்று இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய்யில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்தவும் உதவுகிறது.

விளக்கெண்ணெய் முகப் பருவுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. இந்த எண்ணெய்யில் உள்ள ரிசினோலிக் அமிலம் முகப்பருவை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த இயற்கையான மருந்தாக விளங்குகிறது.

கடுக்காய்ப் பொடியுடன் சிறிது ஆமானக்கு எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அஜீரணம், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் புழுக்கள் குணமாகும்.

No comments