Breaking News

ஆண்டுக்கு 1000 ரூபாய் கட்டினால் 20 லட்சம் ரூபாய் கிடைக்கும்... எஸ்பிஐ தரும் சூப்பர் வசதி தெரியுமா?


எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருந்து ஏதேனும் அசம்பாவிதத்தில் மரணம் அடைந்தால் 20 லட்சம் காப்பீடு கிடைக்கும்..

அதேநேரம் சம்பளக் கணக்கு இல்லாதவர்களும் விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1000 மட்டும் செலுத்தி ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு பெற முடியும்.

ஜீரோ பேலன்ஸ் கணக்கு: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருந்தால் அவர்கள் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது. மேலும், எஸ்ஐபி வங்கயில் சம்பள கணக்கு வைத்திருப்பவர் எந்த வங்கியின் ஏடிஎம்கள் மூலமாகவும் வரம்பற்ற பரிவர்த்தனைகளை அதாவது எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுக்க முடியும்.

இலவச காப்பீடு: எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்க வைத்திருப்போருக்கு, அவர்களின் நிகர சம்பளத்தைப் பொறுத்து, அவர்கள் தனிப்பட்ட விபத்து இறப்புக் காப்பீடு என்பது ரூ.20 லட்சம் வரையும், விமான விபத்து இறப்புக் காப்பீடு 30 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இந்த காப்பீடு பெறுவதற்கு விபத்து நடந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பித்தாக வேண்டும்.

அதேநேரம் சம்பளக் கணக்கு இல்லாதவர்களும் விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1000 மட்டும் செலுத்தினால் போதும், எதிர்பாராமல் விபத்து நடந்து உயிரிழந்தால் ரூ.20 லட்சம் காப்பீடு தொகை கிடைக்கும். மிகவும் எளிதான, பெரிதும் பயன்பதரக்கூடிய இந்த திட்டத்தில் எஸ்பிஐ இல் வங்கி கணக்கு வைத்துள்ள அனைவருமே சேர முடியும்.

சரி அடுத்த விஷயத்திற்கு வருவோம்.. எஸ்ஐபி வங்கியில் சம்பளக்கணக்கு வைத்திருப்போருக்கு தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள் மற்றும் கார் கடன்கள் உள்ளிட்டவை குறைவான வட்டி விகிதங்களில் எளிதான கடன் கிடைக்கும். கடன்களுக்கான பிராசசிஸ் பீஸ் அதிகபட்சமாக 50% வரை குறைக்கப்படும் .

மேலும் எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவருக்கு லாக்கர் வாடகையில் 25% வரை குறைவாக கிடைக்கும். எஸ்ஐபிஐ இல் சம்பளக் கணக்கு தொடங்கும் போதே. ஊழியர்கள் டிமேட் மற்றும் ஆன்லைன் வர்த்தகக் கணக்குகளைப் பெற முடியும்.

SBI சம்பள கணக்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 4% pa. சம்பளக் கணக்கில் உள்ள அதிகப்படியான தொகையை நிரந்தர வைப்பு கணக்கிற்கு மாற்றும்போது, ​​அதிக வருமானத்தை அனுபவிக்க முடியும். மேலும், எஸ்ஐபிஐ இல் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவச டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. எஸ்பிஐயின் கோர் பேங்கிங் வசதி அனைத்து எஸ்பிஐ கிளைகளிலும் ஒரே சம்பளக் கணக்கைத் தொடர கணக்கு வைத்திருப்பவரை அனுமதிக்கிறது.

அதுமட்டுமின்றி எஸ்பிஐ-இல் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் ஓவர் டிராஃப்ட் வசதியை அனுபவிக்க முடியும். அவர்கள் கணக்கில் 10 பைசா கூட இல்லை என்றாலும், அவர்களின் நிகர சம்பளத்தை (மாதம்) விட இரண்டு மடங்கு வரை ஓவர் டிராஃப்ட் எடுக்கலாம். பிராசசிங் கட்டணங்கள் எதுவும் இல்லை, மேலும் ஆறு மாதங்களில் திருப்பிச் செலுத்தும் வசதி அவர்களுக்கு கிடைக்கும். மேலும் காசோலை புத்தகம், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றின் மூலம் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற முடியும்.

இருப்பினும், இந்த வசதிகள் அனைத்தும் ரூ.25000க்கு (இது இப்போது நகரத்தை பொறுத்து அதிகமாக கூட இருக்கலாம்) மேல் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மட்டுமே இருக்கும். சம்பளக் கணக்கில் குறைந்தபட்சம் ஆறு மாதம் சம்பளம் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

No comments