SBI இல் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50 இலட்சம் விபத்துக் காப்பீடு :
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகேஷ் குமார் ( வயது 24 ) . ராணுவ வீரரான இவர் , தேவாரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார் . இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இராணுவத்தில் துப்பாக்கி சூட்டில் யோகேஷ் உயிரிழந்தார் . இதைத்தொடர்ந்து யோகேஷின் தாயார் நாகரத்தினத்திடம் , விபத்து காப்பீட்டு தொகையான ரூ .50 லட்சத்துக்கான காசோலையை வங்கி மேலாளர் திரு . பால விக்னேஷ் வர பிரசாத் வழங்கினார் . அப்போது கேஷ் அதிகாரி திரு . ஆஷிக் அப்துல் கனி மற்றும் வங்கி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து வங்கி மேலாளர் திரு . பால விக்னேஷ் வர பிரசாத் கூறுகையில் , “ பாரத ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் , வங்கியில் விபத்து காப்பிடு திட்டத்தின் பயனை பெற முடியும் மேலும் சம்பள கணக்கு இல்லாதோர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு .1,000 மட்டும் செலுத்தினால் , எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ .20 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்கும்.
மிகவும் எளிதான , பெரிதும் பலன் தரக்கூடிய விபத்து காப்பீட்டு திட்டத்தில் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டும் " என்றார் .
No comments