Breaking News

வருமான வரி கட்டுவோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. ஐடிஆரில் மத்திய அரசு புதிய அப்டேட்:


வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவம் வரப்போகிறது. ஏனெனில் 2023 - 24 நிதி ஆண்டுக்கான புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது.

இந்த படிவத்தில் என்ன மாற்றங்கள் வந்துள்ளது என்பதை பார்ப்போம்.

வருமான வரி ரிட்டர்ன் (ITR) என்பது நம்முடைய வருமானம் மத்திய அரசின் வருமான வரித் துறைக்கு விவரங்களைத் தாக்கல் செய்வதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் படிவம் ஆகும். இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி, 5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் ஒவ்வொரு தனிநபரும் , வணிகரும் வருமான வரி ரிட்டன் (IT ரிட்டன்) தாக்கல் செய்ய வேண்டிது அவசியம் ஆகும். வரி விதிக்கக்கூடிய வருமானம், வரிப் பொறுப்பு மற்றும் வரி விலக்கு கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் அதன் மூலம் நிவாரணமும் பெற முடியும்.

நிறுவனங்கள் அல்லது பெருநிறுவனங்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) மற்றும் சுயதொழில் செய்பவர்கள் அல்லது சம்பளம் வாங்கும் நபர்கள் வருமான வரிக் கணக்கை அரசு அறிவிக்கும நாட்களுக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாகும் இல்லையெனில், தாமதமாக தாக்கல் செய்வதற்கு அபராதம் விதிக்கப்படுவது நடைமுறையாக உள்ளது.

இந்தியாவில் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்படி, தனிநபர்கள் பின்வரும் படிவங்களை தான் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய பயன்படுத்த வேண்டும்.

ஐடிஆர் 1 அல்லது சஹாஜ்: சம்பளம்/ஓய்வூதியம் மற்றும் 1 வீட்டுச் சொத்தில் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான தனிநபர்கள் இதைப் பயன்படுத்த வேண்டும்.

ஐடிஆர் 2: ITR-2 படிவம் என்பது சொத்துக்கள் அல்லது சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் சம்பாதித்த தனிநபர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வகை ITR படிவம். நம் நாட்டை தவிர மற்ற நாடுகளில் பணம் சம்பாதிப்பவர்களுக்கும் இந்தப் படிவம் பயன்படுத்த வேண்டும். தனிநபர்கள் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUF) பொதுவாக இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி தங்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.

ITR 2A: ITR-2A படிவம் என்பது 2015-16 வரி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவம் ஆகும். இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) அல்லது தனிப்பட்ட வரி செலுத்துவோர் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த முடியும்.

ஐடிஆர் 3: ITR-3 படிவம் ஒரு தனிப்பட்ட வரி செலுத்துவோர் அல்லது ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் ஆனால் நிறுவனம் வழியாக எந்த வணிகத்தையும் நடத்தாத ஒரு இந்து பிரிக்கப்படாத குடும்பம் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து பணம் சம்பாதிக்காதவர்களுக்கும் இந்த படிவம் உதவும்.

ITR-4 : இந்த வகையான ஐடிஆர் படிவம் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தப் படிவம் வருமானக் கட்டுப்பாடு இல்லாமல், அனைத்து வகையான வணிகங்கள், நிறுவனங்கள் அல்லது தொழில்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஐடிஆர்-4எஸ்: ITR-4S படிவத்தை எந்தவொரு நபரும் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பமும் (HUF) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படுத்த முடியும்.

ஐடிஆர் 5: ITR-5 படிவம், நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்கள், தனிநபர்களின் அமைப்பு ஆகியவற்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஐடிஆர் 6: பிரிவு 11 இன் கீழ் வரி விலக்கு கோரும் நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களைத் தவிர, அனைத்து நிறுவனங்களும் ITR-6 படிவத்தைப் பயன்படுத்தலாம். பிரிவு 11 இன் கீழ் வரி விலக்குகளை கோரக்கூடிய நிறுவனங்கள், மதம் அல்லது தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சொத்திலிருந்து வருமானம் பெறுகின்றன. இந்த குறிப்பிட்ட வருமான வரி அறிக்கையை ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய இயலும்.

ஐடிஆர் 7: கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், மதம் அல்லது தொண்டு அறக்கட்டளைகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றில் விலக்கு கோரும் நிறுவனங்களால் இந்தப் படிவம் பயன்படுத்தப்பட வேண்டும். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வருமான வரி ரிட்டன் தொடர்பான படிவங்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த முறை வழக்கத்தை விடவும் முன்னதாக படிவங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன ஐடிஆர் 1 (SAHAJ) மற்றும் ஐடிஆர் 4 (SUGAM) ஆகிய இரு புதிய வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது ஐடிஆர் 1 படிவமானது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கானது. ஊதியம், வட்டி வருவாய், வேளாண் துறை மூலமாக வருவாய் பெறுபவர்கள் இந்தப் பிரிவில் தாக்கல் செய்ய வேண்டும்.

ஐடிஆர் 4 படிவமானது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை தொழில் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கானது. இந்தப் புதிய படிவங்களில், வரிதாரர்கள் தங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பண ரசீது விவரங்களையும் கண்டிப்பாக இனி குறிப்பிட வேண்டும். குறிப்பாக, முந்தைய ஆண்டில் இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த வங்கிக் கணக்குகள், அவை எந்த வகை கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை வரிதாரர்கள் தெரிவித்தாக வேண்டும். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாக படிவங்கள் வெளியிடப்பட்டிருப்பது, சீக்கிரமே படிவங்களை தாக்கல் செய்ய வரிதாரர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments