Breaking News

வருமான வரித் தாக்கல்... புதிய படிவங்கள் அறிமுகம்.. மாற்றங்கள் என்ன?


.டி.ஆர் 1 மற்றும் ஐ.டி.ஆர் 4 ஆகிய வருமான வரிப் படிவங்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு படிவங்களிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்தான் வருமான வரிப் படிவங்கள் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை முன்கூட்டியே டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி

2023-24 நிதியாண்டில் கிடைத்த வருமானத்துக்கு 2024-25 நிதியாண்டில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய இந்த புதிய படிவங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

சம்பளதாரர்கள், குடும்ப ஓய்வூதியததாரர்கள், 5,000 ரூபாய் வரை வேளாண் வருமானம் பெறுவோர், ஒரு வீடு வாயிலாக வருமானம் பெறுவோர் ஐ.டி.ஆர் 1 (Sahaj) படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

தொழில் மற்றும் தொழில்முறை வருமானம் பெறும் தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்பங்கள், நிறுவனங்கள், சம்பளம்/பென்ஷன் வாயிலாக 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் ஐ.டி.ஆர் 4 (Sugam) படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

No comments