Breaking News

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 புத்தாண்டு பரிசுகள்: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிக்கும்:

 
 
7வது ஊதியக்கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு:இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மத்திய தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய புத்தாண்டு பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு தேர்தலுக்குள் இரு பெரிய அறிவிப்புகளை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். இந்த அறிவிப்புகளின் கீழ், அகவிலைப்படி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கலாம். தற்போது, ​​மத்திய ஊழியர்கள் ஜூலை முதல் 46 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். ஜனவரியில் டிஏ 4 முதல் 5 சதவவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 முதல் 51 சதவிகிதமாக அதிகரிக்கும்.

No comments