Breaking News

இந்த ரேஷன் கார்டு இருக்கா? வேலை கண்டிப்பா இருக்கு...


Rural Skill Development Scheme : இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்றார் மகாத்மா காந்தி. ஆனால், இன்றைய பொருளாதார வளர்ச்சி நகர்ப்புறத்திற்கு சார்பாக இருந்து வருகிறது.
இதற்கு, சேவைத் துறை வளர்ச்சி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உதாரணமாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில், வேளாண் துறையின் பங்களிப்பு 13% ஆகவும், தொழிற்துறையின் பங்களிப்பு 32% ஆகவும், சேவைத் துறையின் பங்களிப்பு 55% ஆகவும் உள்ளன

மிகவும் குறைந்த அளவு பொருளாதார உற்பத்தித் திறன் கொண்ட வேளாண் துறையில் மட்டும் மாநிலத்தின் உழைக்கும் மக்கள் தொகையில் 42% பேர் பணியாற்றி வருகின்றனர். விவாசாயத் துறையில் லாபமும், உற்பத்தித் திறனும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்த உபரி தொழிலாளர்களுக்கு தேவையான திறன் பயிற்சி அளித்து, தொழில் மற்றும் சேவைத் துறைக்கு மாற்றம் செய்யும் பொருட்டு மத்திய / மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதில், மத்திய ஊரக அமைச்சகத்தின் 'தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா' (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana) என்ற திட்டம், கிராமப்புற இளைஞர்களை தொழிலாளர் சக்தியாக மாற்றி வருகிறது. இந்த திட்டம், 60:40 என்ற விகிதத்தில் மத்திய / மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.


கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டார் திறன் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.



இத்திட்டத்தை கீழ், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் இலவசமாக திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களில் குறைந்தபட்சம் 70% கட்டாய ஏதேனும் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தையும் இத்திட்டம் கொண்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்:

  • VPRC -ஆல் (கிராம வறுமை ஒழிப்புச் சங்கம்) பராமரிக்கப்படும் ஏழைகளின் பங்கேற்பு அடையாள (PIP) பட்டியலில் உள்ள ஏழைகள்;

  • MGNREGA குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள்;

  • அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY - Ration Card Holders) அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்;

  • TNSRLM இன் கீழ் SHG இல் ஒரு குடும்ப உறுப்பினராக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்;


சலுகைகள்:

அனைத்து விண்ணப்பதாரர்களும் இலவசமாக பயிற்சி பெறலாம்.

அனைத்து குடியிருப்பு பயிற்சியாளர்களுக்கும் (residential ) இலவச தங்கும் விடுதியும் வழங்கப்படும்.

குடியிருப்பு அல்லாத பயிற்சி பெறுபவர்களுக்கு (Non Residential Trainer) பயணப்படியாக ஒரு நாளைக்கு ரூ.125/- வழங்கப்படும்.

பயிற்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் அனைத்து விண்ணப்பதாரர்களும் சீருடை பெறுவார்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் பணிப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பிற ஆய்வுப் பொருட்கள் உட்பட பயிற்சிப் பொருட்களை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் அனைத்து விண்ணப்பதாரர்களும் DDU-GKY திறன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.6000/- அல்லது மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல், பயிற்சியளிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணியமர்வின் போது ஊதியம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? "கௌஷல் பாஞ்சி" (Kaushal Panjee) என்ற திறன் பதிவேடு மொபைல் செயலியை மத்திய ஊரக அமைச்கம் வடிவைத்துள்ளது . அதன் இணையதளம் https://kaushal cardpanjee.nic.in/

செயலி அல்லது இணையதளம் மூலம் பதவி செய்த, தங்கள் அருகிலுள்ள பயிற்சி மையங்கள், வேலை மேளாக்கள் மற்றும் பேட்ச்களின் தொடக்கம் குறித்த விவரங்களைப் பெறலாம். தமிழகத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தையும் அணுகலாம்.

No comments