கொலஸ்ட்ராலை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் இலைகள்: இப்படி சாப்பிடுங்க... ஈசியா குறைச்சிடுங்க
மோசமான வாழ்க்கை முறையால், இப்போதெல்லாம் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். அவற்றில் சில மாரடைப்பு, டைப் 2 நீரிழிவு, பக்கவாதம் ஆகியவை ஆகும்.
இவற்றை தவிரவும் பிற நோய்களின் ஆபத்தும் அதிகமாக உள்ளது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கத் தொடங்குவதால் இது நிகழ்கிறது. கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு. இது அதிகமாக அதிகரித்தால் பல பிரச்சனைகளை உண்டாக்கும். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம். ஏனெனில் அதிகரித்த கொலஸ்ட்ரால் இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மரணத்திற்கும் வழிவகுக்கக்கூடும் என்பது கசப்பான உண்மையாகும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இலைகள் (Leaves To Reduce Bad Cholesterol):
கொலஸ்ட்ராலை அதிகரிக்க விடாமல் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நம் உடலை எந்த வித உடல் உபாதைகளும் தாக்காமல் காக்கலாம். அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை எப்படி குறைப்பது? பல இயற்கையான வழிகளில் இதை செய்யலாம். அதில் ஒன்று சில இலைகளின் பயன்பாடு. 5 வகையான இலைகளின் உதவியுடன் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுக்கலாம். இந்த இலைகளை மென்று சாப்பிடுவது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை (Cholesterol) நீக்குகிறது. ஏனெனில் இந்த இலைகளில் உள்ள மருத்துவ குணங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் இலைகள் இதோ
துளசி இலைகள்
துளசி இலைகள் (Tulsi) இரத்தத்தில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குகிறது. இதை தினமும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். இதன் மூலம் நிச்சயம் பலன் கிடைக்கும்.துளசி இலையில் தேநீர் தயாரித்து அருந்தலாம்.
நாவல் பழ இலைகள்
நாவல் பழ இலைகளும் (Jamun Leaves) கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முக பயனுள்ளதாக இருக்கும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த பழங்கள் உதவும். 3-4 இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் தேன் சேர்த்து குடிக்கவும்.
கறிவேப்பிலை
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலையும் (Curry Leaves) கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது ஒன்றல்ல பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் சிறந்தது. இதை உபயோகிக்க 7 அல்லது 9 கறிவேப்பிலைகளை கொதிக்க வைத்து வடிகட்டி தேனில் கலந்து குடிக்கவும்.
வேப்ப இலைகள்
தினமும் வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை (Neem Leaves) மென்று சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இது கொலஸ்ட்ரால் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
முருங்கை இலைகள்
முருங்கை இலையில் (Moringa Leaves) நல்ல அளவு வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இது தவிர, அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இதில் காணப்படுகின்றன. மேலும் இது இரத்த தமனிகளில் கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கிறது. இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. இதனுடன், இதன் மூலம் உடலுக்கு ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் கிடைக்கும்.
No comments