இது தெரியுமா ? காலையிலும் மாலையிலும் 30 நிமிடம் இந்த பயிற்சியை செய்து வந்தால்...
எட்டு வடிவ நடைப்பயிற்சி:-
தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.
பயன்கள்:
- நடக்கும் போது பத்து நிமிடங்கள் வலமிருந்து இடமாகவும் பத்து நிமிடங்கள் இடமிருந்து வலமாகவும் நடக்க வேண்டும். இதுவே உடலில் நோய்கள் அண்டாமல் பார்த்துகொள்ளும்.
- இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.
- 8 வடிவ நடை பயிற்சியின் போதே வயிறு காலியாக இருக்க வேண்டியது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதாக இருந்தால் உணவு சாப்பிட்டு குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் கழிந்த பின்பே இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- நடைப்பயிற்சியின் போது பலரும் உடற்பயிற்சிக்கு ஏற்ற காலணிகளை அணிந்து செல்கின்றனர். ஆனால் இந்த எட்டு நடைப்பயிற்சியின் போது எந்த வகையான காலணிகளும் இல்லாமல் வெறும் கால்களில் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதே முழுமையான பலன்களை கொடுக்கும். கால்களில் காயம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் காலணி, ஷூ போன்றவற்றை அணிந்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
- 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.
- குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.
- முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
- கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
- 8 வடிவ நடைப்பயிற்சி மனிதர்களின் கண்களின் பார்வை திறனை மேம்படுத்தும். 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கண்பார்வை மங்குதல், கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அறவே நீங்கும்.
- செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
- உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் குறைந்தது ஆறு மாத காலத்திற்கு இந்த 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஆறு மாத காலம் கழிந்ததும் மருத்துவரின் ஆலோசனை பெற்று எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது தான் என்றாலும் கர்ப்ப காலத்தில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ள கூடாது.
- குதிகால் வலி, இடுப்பு வலி, உயர் இரத்த அழுத்த நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் இந்த எட்டு வடிவ நடைபாதையில் நடக்க அறிவுறுத்துவதுண்டு.
- உடலில் ஏற்படக்கூடிய சோர்வை நீக்குவதோடு, மனதில் ஏற்படக்கூடிய சோர்வையும் நீக்கி உற்சாகத்தை அளிக்கும்.
- உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
- காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.
- அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.
- இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.
- முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
எச்சரிக்கை
இந்த
எட்டு வடிவ நடைபாதையை சரியாக அமைக்க வேண்டும். இதன் அமைப்பில் குறிப்பாக
நீளத்தில் ஆறு அடிக்கும் கீழ் சுருக்கினால், சிறிய வட்டப்பாதையில் நடக்கும்
நிலையால் தலைசுற்றல் ஏற்படும். மித வேகத்தில் நடப்பதே சிறப்பது. வேகமாக
நடப்பது கூடாது.
No comments