Breaking News

14 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு :

Rainfall_weather_edi.jpg?w=400&dpr=3

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக். 29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 40, முக்கடல் அணை (கன்னியாகுமரி), நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை (கடலூா்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ராஜபாளையம் (விருதுநகா்) தலா 30, மதுரவாயல் (சென்னை), கரியகோவில் அணை (சேலம்), சிதம்பரம் (கடலூா்) தலா 20.

No comments