Breaking News

7.5 சதவீத வட்டி வரை வழங்கும் போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் திட்டம்:


சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் சம்பாதிப்பதில் காட்டும் அதே அளவு அக்கறையை சம்பாதித்த பணத்தை சேமிப்பதிலும் காட்டுகிறார்கள்.
தங்கள் எதிர்கால நன்மைக்காக பணத்தை சேமிக்க விரும்பும் மக்கள் அவர்கள் தேர்வு செய்யும் டெபாசிட் முறைகள் மற்றும் சேமிக்கும் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பானவைகளா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் சிலர் பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பாதுகாப்பான பல சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் அலுவலகம் மூலம் நடத்தப்படுகின்றன. அதில் ஒரு திட்டமான, அதிக வட்டி அளிக்கக்கூடிய போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் (TD Account) பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்யலாம். அஞ்சல் துறையில் பல வகையான சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் வைப்புத் திட்டங்கள் உள்ளன. இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு எஸ்பிஐ -ஐ (SBI) விட அதிக வட்டி கிடைக்கும் தபால் நிலையத்தின் நேர வைப்புத் திட்டம் (Time Deposit Scheme - TD Account) பற்றி இப்போது பார்க்கலாம்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் (Time Deposit Scheme) கீழ், 5 வருட டெபாசிட்டுகளுக்கு 7.5 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்தால் 6.90 சதவீதம் வட்டி கிடைக்கும். ஒரு முதலீட்டாளர் டைம் டெபாசிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து, 7.5 சதவீத வட்டியைப் பெற்றால், அவரது பணம் இரட்டிப்பாவதற்கு சுமார் 9 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் அதாவது 114 மாதங்கள் ஆகும். அதே நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் 5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு வட்டியாக ரூ.2,24,974 கிடைக்கும். அதாவது ஐந்து ஆண்டுகள் முடிவில் நீங்கள் ரூ.7,24,974 பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் பத்து வயது நிரம்பிய குழந்தைகளின் பெயரில் கூட கணக்கு தொடங்கலாம். மேலும், 3 பேர் வரை கூட்டாக சேர்ந்தும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். இந்த டைம் டெபாசிட் திட்டம் வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கின் பலனை வழங்குகிறது. கணக்கைத் தொடங்கும் போது நாமினியை பரிந்துரைக்கும் வசதியும் உள்ளது. ஆனால், முதிர்வடைவதற்கு முன்னரே பணத்தை எடுத்தால் இந்த திட்டத்தில் அபராதம் விதிக்கப்படும்.

இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசு மாற்றிக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

No comments