Breaking News

வாழைப்பழம் வாங்கும் போது இதை கவனிங்க, எச்சரிக்கும் நெட்டிசன்கள்!


ளிமையான மக்கள் முதல் பணக்கார மக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் குறைந்த விலையில் வாங்கக் கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது.
நம் உடல் ஆரோக்கியத்திற்கு இது பல வகைகளில் பலன் தரக் கூடியது. நார்ச்சத்து மிகுந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் நம் உடல் எடை குறையும் மற்றும் செரிமானத் திறன் மேம்படும். வாடிக்கையாக வாழைப்பழம் சாப்பிட்டு வரும் மக்களுக்கு இதய ஆரோக்கியம் மேம்படும் என்று உறுதியாக சொல்லலாம். வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், வாழைப்பழம் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கவும், அதன் மூலமாக நமக்கு தீங்கு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.

சாதாரணமாக வாழைப்பழங்கள் அழுகிப்போய் இருந்தாலே அதை நாம் சாப்பிட முடியாது. ஆக, வாழைப்பழத்தை ஆசையோடு வாங்கினால் மட்டும் போதாது. அதில் ஏதேனும் நோய்த் தாக்குதல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. வாழைப்பழத் தோல்களின் மீது வெள்ளை நிற திட்டுகள் இருந்தால் அது அபாயகரமானது என்று எச்சரிக்கின்றனர். "பூச்சிகள் கூடுகட்டி இருந்தால்தான் அதுபோன்ற வெள்ளைத் திட்டுகள் தென்படும்'' என்று சோஷியல் மீடியா யூஸர்கள் எச்சரிக்கின்றனர்.

முன்னதாக பேஸ்புக் வலைதளத்தில் Family Lockdown Tips & ideas என்ற குழுவில், வாழைப்பழம் வாங்கிய போது காணப்பட்ட வெள்ளை திட்டுக்களுடன் கூடிய படங்களை ஒருநபர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், "இந்த வாழைப்பழத்தை நேற்று வாங்கினேன். இதில் உள்ள வெள்ளை நிற திட்டுகளை பாருங்கள். இது குறித்து உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா" என்று கேட்டிருந்தார்.

: மக்கள் ஏன் வாரணாசியில் வந்து தகன சடங்குகளைச் செய்ய விரும்புகிறார்கள் தெரியுமா..?

நெட்டிசன்கள் அளித்த பதில்கள்

இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் வெவ்வேறு பதில்களை தெரிவித்தனர். பேஸ்புக் பதிவாளர் ஒருவர் வெளியிட்ட கமெண்டில், "கடந்த ஆண்டு நான் ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கிய போது அதில் எட்டுக்கால் பூச்சிகள் கூடு கட்டி முட்டை பொரித்து இருப்பதையும், அதிலிருந்து சின்ன சின்ன பூச்சிகள் வெளிவருவதையும் பார்த்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இது போன்ற பழங்களை சாப்பிட்டால் வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படுவது உறுதி என்று மற்றொரு பேஸ்புக் பதிவாளர் தெரிவித்தார். இதற்கிடையே பலரும் எச்சரித்த நிலையில் வாழைப்பழங்களை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டதாகவும், இனி பழங்கள் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருக்கப் போவதாகவும் பதிவாளர் தெரிவித்தார்.

ஆபத்து கிடையாது

ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒன்று இந்த பதிவுக்கு அளித்த பதில், "வாழைப்பழ தோலில் வெள்ளை நிற திட்டுக்களாக காணப்படுவது மாவுப்பூச்சி ஆகும். இது பெரிய அளவுக்கு அபாயகரமானது கிடையாது. வாழைப்பழங்களின் இடுக்குகளுக்கு இடையே வாழ்வதற்கு சௌகரியமான இடம் கிடைப்பதால் இந்த பூச்சிகள் அங்கு குடியேறுகின்றன" என்று தெரிவித்துள்ளனர்.

No comments